ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை வெளிமார்க்கெட்டில் வாங்குவதைவிட ராணுவ மார்க்கெட்டில் வாங்குவதன் மூலம் ரூபாய் 1.26 லட்சத்தை ராணுவ வீரர்களால் மிச்சம் செய்ய முடியும். இப்படியாக இந்த கார் வெளிமார்க்கெட்டில் என்ன விலையில் விற்பனையாகிறது? ராணுவ மார்க்கெட்டில் என்ன விலையில் விற்பனை ஆகிறது? என்ற விரிவான விபரங்களை தான் காணப் போகிறோம்.
இந்தியாவில் உள்ள ராணுவ வீரர்களுக்காக நாடு முழுவதும் ஆங்காங்கே ராணுவ கேண்டீன்கள் அமைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதால் வெளிமார்க்கெட்டை விட குறைவான விலையில் பொருட்களை வாங்க முடியும். அங்கு கார்கள் கூட விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியாக வெளிமார்க்கெட்டில் கார்களை வாங்குவதற்கும் ராணுவ மார்க்கெட்டில் கார்களை வாங்குவதற்கும் இருக்கும் வித்தியாசம் என்றால் அது ஜிஎஸ்டி வரி தான் இப்படியாக மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காருக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் ராணுவ மார்க்கெட்டில் வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்களால் எவ்வளவு பணத்தை நிச்சயம் செய்ய முடியும் என்ற விபரங்களை வேரியன்ட் வாரியாக காணலாம்.
மாருதி ஃபிராங்க்ஸ் கார் தற்போது 1.2லிட்டர் பெட்ரோல், 1.0லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆட்டோமெட்டிக், 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆகிய ஐந்து விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வெளி மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதில் ராணுவ மார்க்கெட்டில் சிஎன்ஜி கார், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையில் இல்லை. மற்ற மூன்று வேரியன்ட் கார்களும் விற்பனையில் உள்ளன.

முதலில் 1.2லிட்டர் பெட்ரோல் மேனுவல் காரை பார்ப்போம். இதில் ஸிக்மா வேரியன்ட் வெளிமார்க்கெட்டில் ரூ7.51லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ6.51லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 99 ஆயிரம் ஆகும். அடுத்ததாக டெல்டா வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூபாய் 8.37 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூபாய் 7.26 லட்சம் என்ற விலையிலும், விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் 1.11 லட்சம் ஆகும்.
இந்த இன்ஜின் ஆப்ஷன் உடன் இருக்கும் கடைசி டாப் வேரியன்ட்ன் என்றால் டெல்டா பிளஸ் வேரியன்ட் தான். இது வெளிமார்க்கெட்டில் ரூ8.77லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ7.62லட்சம் என்ற விலையிலும், விற்பனையாகிறது இதன் வித்தியாசம் ரூ1.15 லட்சம் ஆகும். அடுத்ததாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் கார் இருக்கிறது.

இந்த இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரில் வெளி மார்க்கெட்டில் டெல்டா பிளஸ், ஸெட்டா, ஆல்பா ஆகிய மூன்று வேரியண்ட் விற்பனையானாலும், ராணுவம் மார்க்கெட்டில் டெல்டா பிளஸ் என்ற வேரியண்ட் மட்டுமே விற்பனையாகி வருகிறது. அதன்படி வெளிமார்க்கெட்டில் இந்த வேரியன்ட் ரூ9.72லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது, ராணுவ மார்க்கெட்டில் ரூ8.45லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த வேரியன்டில் தான் அதிகபட்சமாக ரூ1.26லட்சம் வரை ராணுவ வீரர்களால் மிச்சம் செய்ய முடியும்.
அடுத்ததாக 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் கார் ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனில் வெளிமார்க்கெட்டில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய வேரியன்ட் விற்பனையாகி வருகிறது. இதில் டெல்டா பிளஸ் வேரியண்ட் மட்டுமே ராணுவம் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. இந்த காரைப் பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ9.27 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ராணுவ மார்க்கெட்டில் ரூ8.07 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ 1.20 லட்சம் ஆகும்.
இதன் மூலம் ராணுவ வீரர்கள் கார் வாங்க வேண்டும் என நினைத்தால், இந்த காரை ராணுவத்தை ஆண்டின் மூலம் வாங்குவதால் ரூ 1.26 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும். ஆனால் ராணுவ வீரர்கள் ராணுவ கேண்டீனில் கார் வாங்குவதற்கு பல்வேறு விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதை பின்பற்றி கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவ கேண்டீன்களில் குறைவான விலையில் கார்கள் விற்பனை செய்யப்படுவது ராணுவ வீரர்களுக்கான சலுகை தான். தவிர இதை பொதுமக்கள் நாம் பயன்படுத்த முடியாது. ராணுவ கேண்டீனில் வாங்கப்பட்ட காரை செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்யவும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதை நேரடியாக பொதுமக்கள் அனுபவிக்க வாய்ப்பு இல்லை.


Click it and Unblock the Notifications









