29 கிமீ மைலேஜ் குடுக்கற காரை அடிமாட்டு விலையில் விக்கறாங்க! அதான் ஷோரூம் வாசல்ல எல்லாரும் க்யூல நிக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை (Sales Milestone) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சுமார் 1 மாதத்திற்கு முன்பாக கடந்தது. இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை கடப்பதற்கு மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சுமாராக 18 மாதங்களை மட்டுமே எடுத்து கொண்டது. இது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான் விற்பனைக்கே கொண்டு வரப்பட்ட கார் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டிருப்பதால்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரால், இந்த சாதனையை படைக்க முடிந்தது. இந்த வரிசையில் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Maruti Fronx Front View

நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், 45 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11,357 ஃப்ரான்க்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், 16,419 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 45 சதவீத விற்பனை வளர்ச்சியை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பதிவு செய்துள்ளது. அத்துடன் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டாப்-10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUVs), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், 3வது இடத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது.

Maruti Fronx Airbags

முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை வாடிக்கையாளர்கள் வெகுவாக விரும்புவதற்கு பல்வேறு காரணங்களை அடுக்க முடியும். விலை (Price), வசதிகள் (Features) மற்றும் மைலேஜ் (Mileage) போன்றவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் வெறும் 7.51 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 12.87 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என வாடிக்கையாளர்கள் கருதுவது, அதன் சேல்ஸ் ரிப்போர்ட்டில் ஒவ்வொரு மாதமும் எதிரொலிக்கிறது. இந்த காரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு அடுத்த காரணம், அதிநவீன வசதிகள். இந்த காரின் வசதிகளின் பட்டியலை அடுக்கி கொண்டே போக முடியும்.

இதில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்!

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2024, 20:53 [IST]
English summary
Maruti fronx sales report october 2024 price mileage features
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+