யாருக்குமே தெரியாமல் ரகசியமாக இந்த காரை வித்திருக்காங்க போல! ஒரே மாசத்துல இவ்வளவு சேல்ஸ் ஆகிடுச்சா?

இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும் நிலையில் மாருதி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு காருக்கு கடந்த நவம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் சைலன்டாக இந்த காரின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இது பலரை கவரும் விதத்தில் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முன்னணி வாகனத்தை இயக்குனர் மாருதி நிறுவனத்தின் கார்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. ஒவ்வொரு செக்மெண்டிலும் மாருதி நிறுவனம் தான் தற்போது முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாருதி நிறுவன வாகன விற்பனையில் ஒரு புதிய அதிசயம் நடந்துள்ளது.

Maruti Fronx Sales

மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஃபிராங்க்ஸ் என்ற எஸ்யூவி கார் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 14,882 விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 9867 கார்கள் தான் விற்பனை ஆகிவிட்டது. அதை ஒப்பிடும்போது தற்போது 51% அளவுக்கு இந்த காரின் விற்பனையை வளர்ச்சி அடைந்துள்ளது.

இது மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனையான டாப் 10 கார் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரை விட இந்த காரின் விற்பனை வெறும் 36 கார்கள் தான் குறைவாக விற்பனையாகியுள்ளன. இந்த கார் டாப் 10 கார் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Maruti Fronx Sales

மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் மிக வேகமாக விற்பனையாகி வரும் பயணிகள் காராக இருக்கிறது. இந்த கார் அறிமுகமாகி பத்து மாதத்திலேயே சுமார் ஒரு லட்சம் கார்கள் விற்று தீர்ந்தன. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த கார் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த கார் விற்பனைக்காக அறிமுகமானது.

சுமார் 1.5 ஆண்டுகளுக்கு மேல் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் திடீரென இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 9000 கார்கள் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி வருவது மிகப்பெரிய வளர்ச்சி தான்.

Maruti Fronx Sales

மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை பொறுத்தவரை ரூபாய் 7.51 லட்சம் முதல் ரூ13.04 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இந்த கார் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த காரின் சிறப்பு அம்சமே அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சாலையில் செல்லும் போது ஒரு கமெண்டிங்கான பொசிஷன் நமக்கு கிடைக்கும். குறிப்பாக இளம் வாடிக்கையாளர்களை இந்த காம்பேக்ட் கூப்பே எஸ்யூவி கார் அதிகம் கவர்கிறது.

காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்ட் மூலம் இந்த கார் 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இந்த காரில் பூஸ்டர் ஜெட் இன்ஜின் ஆப்ஷன் இருப்பதால் அதிக பெர்ஃபார்மென்ஸ் தரும் காராகவும் இருக்கிறது. அதனால் பெர்ஃபார்மென்ஸ் விரும்பும் மக்கள் பலர் இந்த காரை தான் தேர்வு செய்கிறார்கள்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கார் இந்தியாவில் மட்டும் விற்பனையாகாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு அம்சங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இந்த காரை விரும்பி வாங்கியது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தீபாவளிக்கு பிறகும் சிறப்பான விற்பனையை இந்த கார் பெற்றுள்ளது நிச்சயம் இந்த கார் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2024, 11:35 [IST]
English summary
Maruti fronx sales up 51 percent november 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X