பேய் மாதிரி விற்பனையாகும் மாருதி கார்.. 10 மாசத்துல 1 லட்சம் விற்பனையாறதுலாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயமுங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) தயாரிப்பு (கார் மாடல்) ஒன்று 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையை எட்டி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும், 23 மாதங்களிலேயே இந்த அளவு அதிக விற்பனை எண்ணிக்கையை அந்த கார் மாடல் எட்டியிருப்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) எஸ்யூவி கார் மாடலே அதுவாகும். குறிப்பாக, இரண்டாவது ஒரு லட்சம் யூனிட் விற்பனையானது கடந்த 10 மாதங்களில் கிடைத்தவை என்கிற தகவலை வெளியிட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே நம்மை மாருதி எடுத்துச் சென்றிருக்கின்றது.

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இரு நிறுவனங்களின் கூட்டணியின்கீழ் உருவாக்கப்பட்ட ஓர் கார் மாடலே இந்த கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்திற்காக இந்த கார் மாடல் உருவாக்கப்பட்டதைப் போல, இதே கார் மாடலை ஒத்த வாகனமாக அர்பன் க்ரூரஸர் ஹைரைடர் டொயோட்டாவிற்காக தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti grand vitara

இதற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாகவே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையிலேயே மிகக் கடுமையான போட்டியை இந்த இரண்டிற்கும் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

இருப்பினும், கிரெட்டா சேல்ஸில் அபரீதமான வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை இங்கே யாராலும் மறுக்க முடியாது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு வந்த ஆறே மாதங்களே ஆகின்றநிலையில், ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டியிருக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே இந்த கார் மாடல் ஆறு மாதத்தில் பெற்ற விற்பனையை மாருதியின் தயாரிப்பு 10 மாதங்களில் பெற்றிருக்கின்றது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காருக்கு இவ்வளவு சூப்பரான விற்பனை வரவேற்புக் கிடைப்பதற்கு அந்த காரின் மைலேஜ் திறனே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

கிராண்ட் விட்டாரா பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆகிய அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் வழக்கமான பெட்ரோல் ஆப்ஷனைக் காட்டிலும் அதிக மைலேஜ் தரக் கூடியதாக ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கின்றன. இதன் ஹைபிரிட் ஆப்ஷன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 29 கிமீட்டர் வரையிலம் மைலேஜ் தரும்.

இது அதிகபட்ச மைலேஜை வழங்குகின்ற காரணத்தினாலும், அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் பிரீமியம் அம்சங்களாக எல்இடி பகல்நேர லைட்டுகள், பாடி கிளாடிங் மற்றும் ஹெட்லேம்ப் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட் கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டுகள், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர் பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா இந்தியாவில் ரூ. 13.15 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த அதிக விலையில் விற்கப்படுகின்றபோதிலும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை கிராண்ட் விட்டாரா பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிக ஒர்த்தான வாகனம் என்பதாலேயே பலர் இந்த வாகனத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 13:23 [IST]
English summary
Maruti grand vitara suv hits 2 lakh sales in india sets record
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+