வெறும் ரூ4.92 லட்சத்திற்கு இக்னீஷ் காரா? ரூ1.21 லட்சம் மிச்சம் பண்ண செம வாய்ப்பு!
மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் என்ற பிரீமியம் ஹேட்ச் பேக் கார் நெக்ஸா ஷோரூமில் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது இந்திய ராணுவ வீரர்களுக்காக ராணுவ கேண்டீனிலும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை எவ்வளவு? ராணுவ கேண்டீனில் இந்த காரை வாங்குவதால் எவ்வளவு லாபம்? என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விநியோகம் செய்வதற்காக இந்திய ராணுவம் ஆங்காங்கே ராணுவ கேண்டீன்களை அமைத்து அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் பொருட்களை வாங்குவதைவிட ராணுவம் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கினால் விலை மிகவும் மலிவாக இருக்கும். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களுடன் சேர்த்து வாகனங்களையும் இந்திய ராணுவ கேண்டீனில் வாங்க முடியும்.

அதன்படி மாருதி சுஸூகி நிறுவனம் தனது இக்னீஸ் காரை தற்போது இந்திய ராணுவ கேண்டினிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை வாங்குவதன் மூலம் ஒருவர் ரூபாய் 1.21 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும். மேலும் ரூபாய் 4.92 லட்சம் முதல் இந்த காரை ராணுவ கேண்டீனில் வாங்க முடியும். இந்த காரின் வேரியன்ட் வாரியான ராணுவ கேண்டீன் விலை மற்றும் விலை விபரம் ஒப்பீடுகளை காணலாம்.
மாருதி இக்னீஷ் காரைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் வெளி ஷோரூம்களில் விற்பனையாகும் அனைத்து வேரியனட்களும் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகிறது. முதலில் நாம் 1.2 லிட்டர் மேனுவல் வேரியண்ட் குறித்த விபரங்களை பார்ப்போம்.

இதில் சிக்மா வேரியன்டை பொறுத்தவரை ரூ5.84 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூபாய்4.92 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இந்த வேரியண்ட்டை ராணுவ கேண்டீனில் வாங்குவதன் மூலம் ரூபாய்99,844 மிச்சம் ஆகிறது. அடுத்ததாக டெல்டா வேரியன்டை பொறுத்தவரை எக்ஸ் ஷோரூமில் ரூபாய்6.38 லட்சம் என்ற விலைவிலும் ராணுவ கேண்டீனில் ரூபாய்5.36 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய்1.01 லட்சம் ஆகும்.
அடுத்ததாக ஸெட்டா வேரியன்டை பொறுத்தவரை எக்ஸ் ஷோரூமில் ரூ6.96 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூ5.87 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.08 லட்சம் ஆகும். அடுத்ததாக ஆல்ஃபா வேரியன்டை பொறுத்தவரை ரூ7.61 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூபாய்6.43 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.17 லட்சம் ஆகும். அடுத்ததாக 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களை காண்போம்.

இதன் டெல்டா வேரியன்ட் எக்ஸ் ஷோரூமில் ரூபாய் 6.88 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் 5.79 லட்சம் என்ற விலையிலும், விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் 1.50 லட்சம் ஆகும். ஸெட்டா வேரியன்ட் எக்ஸ் ஷோரூமில் ரூபாய் 7.46 லட்சம் என்ற விலையிலும், ராணுவ கேண்டீனில் ரூபாய் 6.32 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 1.13 லட்சம் ஆகும்.
இல் ரூபாய் 8.11 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூபாய் 6.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 1.21 லட்சம் ஆகும். ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் இந்த காரை வாங்க விரும்பினால் ராணுவ கேண்டீன் மூலம் இந்த காரை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி வரி இல்லாததால் இந்த வாகனங்களின் விலை குறைவான விலையில் விற்பனையாகிறது.
ராணுவ கேண்டின் மூலம் வாகனங்களை பெறும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. குறிப்பிட்ட ரேங்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை வாங்க தகுதி இருக்கும். அதே நேரம் இப்படியாக வாங்கப்படும் வாகனங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு தான் குறைந்த விலையில் வாகனங்களை வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் வெளிமார்க்கெட்டில் கார்களை வாங்குவதைவிட ராணுவ மார்க்கெட்டில் கார்களை வாங்கினால் தான் அவர்களுக்கு குறைந்த விலையில் வாகனங்கள் கிடைக்கும். இப்படியாக இந்த இக்னீஸ் காரை ராணுவம் மார்க்கெட்டில் வாங்குவதன் மூலம் அவர்கள் ரூ1.21 லட்சம் பணத்தை மிச்சம் பண்ண முடியும்.


Click it and Unblock the Notifications









