லாபமே வரலைனாலும் பரவாயில்லனு நினைச்சுட்டாங்களா!.. இக்னிஸ் கார் மாடலின் விலையை மிக பெரிய அளவில் குறைத்த மாருதி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றான இக்னிஸ் (Ignis)-இல் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரேடியன்ஸ் பதிப்பு (Radiance Edition)யையே அது அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான பதிப்பைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உள் மற்றும் வெளிப்புறத்தில் இந்த பதிப்பு பெற்றிருக்கின்றது. இந்த மாற்றங்கள் வாயிலாகவே அது சிறப்பு பதிப்பாக மாறி இருக்கின்றது. இந்த சிறப்பானது இக்னிஸ் கார் மாடலின் தொடக்க நிலை தேர்வான சிக்மா தொடங்கி அனைத்து வேரியண்டுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரேடியன்ஸ் பதிப்பு மிகவும் ஸ்டைலானது மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதும்கூட. சுவாரஸ்யமாக புதிய ரேடியன்ஸ் எடிஷனுக்கு ரூ. 5.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வழக்கமான சிக்மா வேரியண்டைக் காட்டிலும் ரூ. 35,000 மலிவானது என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான சிக்மா ரூ. 5.84 லட்சத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti ignis radiance edition

அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பொதுவாக சிறப்பு பதிப்பை வாகன உற்பத்தியாளர்கள் சற்று அதிக விலையிலேயே விற்பனைச் செய்வார்கள். ஆனால், மாருதி சுஸுகி இந்த சிறப்பு பதிப்பை விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதுபோன்று மாருதி சுஸுகி நிறுவனம் சிறப்பு பதிப்பை குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வருவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அது விலை குறைவாக சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி இக்னிஸ் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகியவையே அவை ஆகும். இந்த வேரியண்டுகளிலும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது மாருதி சுஸுகி. மேலும், இதில் ஏழு விதமான ஒற்றை நிற தேர்வு மற்றும் மூன்று விதமான டூயல் டோன் வண்ண தேர்வு வழங்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இந்த ஹேட்ச்பேக் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ரேடியன்ஸ் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. கூடுதல் அலங்காரமாக இந்த சிறப்பு பதிப்பில் கட்டுமஸ்தான பான்னெட், புரொஜெக்டர் வகை ஹெட்லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் ஸ்போர்ட்டியான 15 அங்குல டூயல்-டோன் நிறம் கொண்ட அலாய் வீல்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

இவையே சிறப்பு பதிப்பிற்கு சிறப்பு சேர்க்க கூடிய அம்சங்கள் ஆகும். இதேபோல் காரின் உட்பக்கத்திலும் சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் நடுத்தர டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, இக்னிஸ் ரேடியன்ஸ் பதிப்பில் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சுஸுகி டோட்டல் எஃபெக்டிவ் கன்ட்ரோல் டெக்னாலஜி (TECT) பிளாட்ஃபார்மில் வைத்து இந்த கார் கட்டப்பட்டுள்ளது.

இது பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதாவது, இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக இரட்டை முன் பக்க ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், கீ-லெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்-கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினை பொருத்த வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷனில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் டூயல்ஜெட் விவிடி பெட்ரோல் எஞ்சினே தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி இக்னிஸ் இந்தியாவில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), சிட்ரோயன் சி3 (Citroen C3) போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியையே கூடுதலாக்கும் வகையில் தற்போது சிறப்பு பதிப்பு இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் நாட்களில் மாருதி இக்னிஸ்க்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்பவே மலிவு விலையில் சிறப்பு பதிப்பை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மாருதி இக்னிஸ் ரேடியன்ஸ் எடிசன் அதன் வழக்கமான மாடலைப் போலவே நெக்ஸா ஷோரூம்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 20:35 [IST]
English summary
Maruti ignis radiance edition launch and price drop announced
மேலும்... #maruti suzuki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+