இன்னோவாவை காப்பியடிச்சு மாருதி வெளியிட்ட காரை வாங்க ஆளே கிடையாது! வெறும் 193 பேர் தான் வாங்கியிருக்காங்க!

மாருதி நிறுவனம் இந்தியாவிலேயே சிறந்த கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்து வருகிறது. இதனால் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் தான் இந்தியாவில் வாகன தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும் நிலையில், இந்நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு தயாரிப்பை வாங்க மக்கள் மிகப்பெரிய அளவில் தயக்கம் காட்டி வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த காரின் விற்பனை மந்தமாகியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் டொயோட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் எதிரொலியாக இந்தியாவிலும் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் மாருதி நிறுவனத்தின் பேட்ஜிலும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் டொயோட்டா நிறுவனத்தின் பேட்ஜிலும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

maruti invicto sales

இந்த ஒப்பந்தத்தில் டொயோட்டாவை விட மாருதி நிறுவனம் தான் அதிகமான பலனை பெற்றுள்ளதாக விமர்சகர்கள் பேசி வந்தார்கள். டொயோட்டா நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மாருதி நிறுவனம் பயன்படுத்தி மாருதி நிறுவனம் சிறந்த ஹைப்ரிட் கார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து நல்ல மார்க்கெட் பங்கை வைத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிறுவனத்தின் சிறந்த காரன டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை மாருதி நிறுவனம் தனது பேட்ஜில் இன்விக்டோ என்ற பெயரில் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஒரு பிரீமியம் செக்மெண்ட் எம்பிவி ரக காராகும். ஏழு பேர் பயணிக்க கூடிய இந்த கார் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும்போது டொயோட்டா காரின் விற்பனைக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

maruti invicto sales

மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடையில் இந்த கார் களமிறங்கிய நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரம் மாருதி நிறுவனத்திற்கு பெரும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இன்விக்டோ காரை வெறும் 193 பேர் மட்டுமே வாங்கி உள்ளதாக விற்பனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. மாருதி தயாரிப்புகளிலேயே இருப்பதிலேயே மிக குறைந்த எண்ணிக்கையில் விற்பனையான கார் இதுதான்.

கடந்த மே மாதம் மட்டுமல்ல கடந்த ஆறு மாதமாகவே இந்த காரின் விற்பனை என்பது மெல்ல மெல்ல சரிந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 502கார்களும், 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 496கார்களும், பிப்ரவரி மாதம் 365கார்களும், மார்ச் மாதம் 348கார்களும், ஏப்ரல் மாதம் 193 கார்களும், விற்பனையாகியுள்ளன. இப்படி தான் கடந்த மே மாதமும் 193 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

maruti invicto sales

ஒட்டுமொத்தமாக இந்த செக்மெண்டிலேயே வாகன விற்பனையில் குறைந்து இருக்கிறதா என்றால் இல்லை. டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் காரை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 8548 இன்னோவா ஹைகிராஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 6மாதத்தில் மொத்தம் 51,261 இன்னோவா ஹைகிராஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காரைப் பொறுத்தவரை கடந்த 6மாதத்தில் 297கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

மாருதி நிறுவனத்தில் இருப்பதிலேயே குறைவாக விற்பனையாகும் கார் இந்த இன்விக்டோ கார் தான். இதற்கு அடுத்த இடத்தில் ஜிம்னி கார் இருக்கிறது. ஜிம்னி காரின் கடந்த மே மாத விற்பனையைப் பொறுத்தவரை 274 கார்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த இடத்தில் மாருதி சியாஸ் கார் இருக்கிறது. இந்த கார் 730 கார்கள் விற்பனையாகி உள்ளன.

மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காரின் இந்த விற்பனை மந்த நிலைக்கு அதன் விலை கூட காரணமாக இருக்கலாம். இன்விக்டோ காரை பொறுத்தவரை ரூபாய் 25.21 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை பொறுத்த வரை ரூபாய் 19.7 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காரை பொருத்தவரை குறிப்பிட்ட சில செக்மெண்டில் உள்ள மக்களின் விருப்பத்தேர்வுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட காராக இருக்கிறது. இதன் காரணமாக இதன் விற்பனை என்பது குறைவாக தான் இருக்கும். இன்னோவா காரை பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருப்பதால் அந்த ஆப்ஷன்கள் அனைத்திலும் சேர்த்து மொத்த விற்பனை அதிகமாக இருக்கிறது. இன்விக்டோவிலும் இப்படியான ஆப்ஷன் வரும் பட்சத்தில் இதன் விற்பனை அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2024, 7:00 [IST]
English summary
Maruti invicto sales may 2024 worst performer 193 units sold report
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X