வெறும் 296 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! இன்னோவா மாதிரி உருவாக்கப்பட்ட காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக சீட்டர் கொண்ட கார்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனால் இந்த கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ளும் நிலையில் மாருதி நிறுவனத்தில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் ஒன்றின் விற்பனை மிக குறைவாக இருக்கிறது. இது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கொரோனாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்கள் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் குடும்பத்துடன் ஒரு இடத்திற்கு சென்று வர வசதியாக இருக்கும் என விரும்புகிறார்கள். பொது போக்குவரத்தை விட மக்கள் இப்படியான அதிக நபர் பயணிக்கும் வாகனங்களை வாங்கினால் அதில் பயணம் செய்ய சுலபமாக இருக்கும் என கருதுகிறார்கள்.

இந்நிலையில் மாருதி நிறுவனம் சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை ரீபேட்ஜ் செய்து மாருதி நிறுவனம் இன்விக்டோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இன்னோவா காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இந்த நிலையில், இந்த காருக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மாருதி நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காரின் விற்பனை இல்லை. கடந்த ஆறு மாதங்களாக மிக குறைவான விற்பனையிலேயே இந்த கார் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் கூட மொத்தம் 296 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது கடந்த செப்டம்பர் மாத விற்பனையான 312 என்ற விற்பனையை இந்த மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காிரன் பொருத்தவரை கடந்த மே மாதம் 193 காரர்களும், ஜூன் மாதம் 128 கார்களும் ஜூலை மாதம் 251 காரர்களும், ஆகஸ்ட் மாதம் 124 கார்களும் விற்பனை செய்துள்ளது. ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி வரும் நிலையில், இந்த காரின் விற்பனை மிக மந்தமாக இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மாருதி நிறுவனத்தின் காரை பொறுத்தவரை 150.19 பிஎச்பி பவர் மற்றும் 188 என்எம் டார்க் திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த கார் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் ஸெட்டா மற்றும் ஆல்பா பிளஸ் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதில் பல்வேறு கலர் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த காரில் முக்கியமாக 10.1 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 50 விதமான கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 7 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே உடன் விற்பனைக்கு வருகிறது.
மாருதி இன்விக்டோ காரின் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான் என கூறப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ கார் தற்போது இந்திய மார்க்கெட் ரூபாய் 25.21 லட்சம் முதல் ரூபாய் 28 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதிக விலை காரணமாக மக்கள் பலர் இந்த காரை வாங்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதற்கு பதிலாக போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்க மக்கள் விரும்புகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இன்விக்டோ காரின் விலையை குறைத்து குறைந்த விலையில் சில வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இந்த காரின் விற்பனை படிப்படியாக அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது விலை காரணமாகவே மக்கள் பலர் இந்த காரை விரும்பவில்லை. மற்றபடி இந்த காரில் குறை சொல்லும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









