நம்ப வைத்து ஏமாத்தும் உலகம்... அதுக்கு இந்த காரே சாட்சி.. இத நீங்க பென்ஸ் காருனு நினைச்சா அதுதான் கிடையாது..

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் தயாரிப்புகளை அனைவராலும் வாங்கிவிட முடியாது. அவை மிகவும் காஸ்ட்லியானவை. இதனால்தான் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக பென்ஸ் கார்கள் இருக்கின்றன. செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கினாலும் பெரும் தொகையை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், பராமரிப்பிற்காக அதிக தொகையை செலவிட வேண்டியிட இருக்கும். இருப்பினும், இந்தியர்கள் பலர் பென்ஸ் கார் மீது அதிகம் மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த மாதிரியானவர்கள் தங்களின் பென்ஸ் கார் தாகத்தை மலிவு விலையில் தீர்த்துக் கொள்வது எப்படி என்கிற ஐடியாவையே இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வழங்கி இருக்கின்றார்.

Maruti jimny modified into mercedes g631

மாடிஃபிகேஷன் வாயிலாக பட்ஜெட் விலை காரை பென்ஸ் காராக மாற்றிக் கொள்ள முடியும் என்கிற ஐடியாவையே அவர் வழங்கி இருக்கின்றார். இந்தியாவின் பட்ஜெட் விலை கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) இருக்கின்றது. இந்த காரையே அவர்கள் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG)-யாக மாற்றி இருக்கின்றனர்.

இதற்கான கன்வெர்ஷன் கிட் (ஜி63 ஏஎம்ஜி-யாக மாற்றுவதற்கான பாடி பேனல்கள்) சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சைடு டோர் பேனல், முன் பக்க பேனல் கிரில், பம்பர் மற்றும் லைட் செட்-அப் ஆகியவற்றைக் கொண்டதே இந்த கிட் ஆகும். இதைக் கொண்டே மாருதி சுஸுகி பென்ஸ் காராக மாற்றப்பட்டு இருக்கின்றது.

Modified maruti jimny interior

மாற்றப்பட்டு இருக்கும் அந்த மாருதி கார் துளியளவும் அது மாருதியின் தயாரிப்பு என்பதை வெளிக்காட்டவில்லை. அந்த அளவிற்கே கச்சிதமாக அந்த கன்வெர்ஷன் கிட் மாருதி சுஸுகியுடன் பொருந்தி இருக்கின்றது. உருவ மாற்றத்தின் மற்றொரு படியாக 20 அங்குல அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இது மேலும், அந்த காருக்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கிந்றது. சண்டிகர் மாநிலத்திலேயே இந்த கார் மாற்றம் நிகழ்வு அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. ஆனால், காரின் உரிமையாளர்கள் விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்த கார் ஓர் நெக்ஸா ஷோரூம் முன்பு நிற்பதை அந்த வீடியோக் காட்டுகின்றது.

Modified maruti jimny seat

இந்தியாவில் இதுபோன்று காரின் உண்மை தன்மை மாற்றும் அளவிற்கு மாற்றுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றச் செயல் ஆகும். இந்த செயலுக்கான கடும் நடவடிக்கையாக வாகனத்தை பறிமுதல் செய்தல் அல்லது மிகப் பெரிய தொகையை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகன மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாக வாகனங்களை மிகவும் அழகானதாக மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு பின்னால் மிகப் பெரிய கசப்பான அனுபவமாக போலீஸின் நடவடிக்கை இருக்கின்றது. காரின் வெளிப்புறத்தைப் போலவே உட் பக்கமும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

Modified maruti jimny side look

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் இந்த காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இருக்கையில் வெள்ளை நிற லெதர் போர்த்தப்பட்டு இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. அந்த லெதர் இருக்கைகளில் பிரபுஸ் எம்பளம் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதேபோல், ஸ்டியரிங் வீல், ஏசி வெண்ட் துளையின் மேற் பேனல் ஆகியவற்றையும் ஜிம்னி காரின் உரிமையாளர்கள் மாற்றி இருக்கின்றனர்.

இந்த அனைத்து மாற்றங்களையும் மிக சிறப்பாக தனக்குள் ஜிம்னி ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் அந்த கார் ஜிம்னி என்பதை இழந்து பென்ஸ் கார் என்கிற பெயரை சூடியிருக்கின்றது. ஆனால், ஒரிஜினல் பென்ஸ் தயாரிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மாருதி சுஸுகி ஜும்னி ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Modified maruti jimny rear

இந்தியாவில் ஐந்து டோர் வெர்ஷன் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ஆகும். மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேநேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரோ 2.45 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய விலைமிக்க காராகவே ஜிம்னி மாறி இருக்கின்றது. எவ்வளவு ரூபாய் இந்த மாற்றத்திற்கு செலவானது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 25 லட்சம் ரூபாய் தொடங்கி 30 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே இதற்கு செலவாகி இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 12:05 [IST]
English summary
Maruti jimny converted into benz g63 amg
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X