போன வருஷம் வெறும் 78 பேர் ஆனா இந்த வருஷம் 4528 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! எப்படி தெரியுமா?
மாருதி நிறுவனத்தின் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் விற்பனையில் இல்லை என்றாலும் சமீப நாட்களாக இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் இந்த காரை வெளிநாட்டில் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 5700 சதவீதம் அளவுக்கு இதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் ஆப்-ரோடு எஸ்யூவி காராக தனது ஜிம்னி காரை இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதல் முதலாக காட்சிப்படுத்தியது. அப்போது இந்த காருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பலர் இந்த காரை விரும்பி வாங்க துடித்து வந்தார்கள். மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வந்த மஹிந்திரா கார் காருக்கு போட்டியாக இந்த கார் அறிமுகமானது.

இந்த கார் ஐந்து டோர் கொண்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி காராக இருந்ததால் குடும்பத்துடன் பயணிக்கும் ஆஃப் ரோடு கார் என இது பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை அதிகமாக வில்லை. ஆனால் வெளிநாட்டில் இந்த காரை அதிகமான மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள்.
மாதிரி நிறுவனத்தின் ஜிம்னி காரை பொருத்தவரை வெளிநாட்டிற்கு மூன்று டோர் கொண்ட ஆஃப்- ரோடு எஸ்யூவி கார் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 4528 கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதி விபரத்தை பார்க்கும்போது வெறும் 78 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 5705 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்திய மக்கள் மத்தியில் இந்த கார் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றும் கூறி விட முடியாது. இந்த காரின் விற்பனை மிகக் குறைவாக இருந்தாலும், சமீப காலமாக இதன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 2429 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஜூன் மாதம் 481 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.
இது மட்டுமல்ல கடந்த ஜனவரி மாதம் 163 கார்களும், பிப்ரவரி மாதம் 322 கார்களும், மார்ச் மாதம் 318 கார்களும், ஏப்ரல் மாதம் 257 கார்களும், மே மாதம் 274 கார்களும், இந்தியாவில் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் திடீரென இந்த காரின் விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கார் இந்தியாவில் தற்போது பிரபலமாகி கொண்டு வருகிறது என சொல்லலாம்.

மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15 மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 எச்பி பவரையும் 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், முன்பக்கமும் பின்பக்கமும் வாஷருடன் கூடிய வைப்பர்கள், டே நைட் ஐஆர்விஎம் முன்பக்க சீட்டுகளை முழுமையாக சாய்த்துக்கொள்ளும் வசதி, மல்டி ஃபங்ஷன் ஸ்டேரிங் வீல், டிஎம்டி கலர் டிஸ்ப்ளே அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரின் உள்பக்கம் 7 இன்ச் கொண்ட ஸ்மார்ட் பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த ஜிம்னி காரை இந்தியாவில் 5 டோர் வெர்ஷன் கொண்ட காராக மட்டுமே விற்பனை செய்து வருகிறது. வெளிநாட்டிற்கு மூன்று டோர் வெர்ஷன் கொண்ட காரை ஏற்றுமதி செய்வதால் அதிக எண்ணிக்கையில் இந்த கார்கள் ஏற்றுமதியாகின்றன. வெளிநாட்டில் இந்த காருக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று டோர் வெர்ஷன் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









