அடுத்தடுத்த மாசமும் மாருதிதான் ஹெட்.. இவ்ளோ சூப்பரான எடிசன் விற்பனைக்கு அறிமுகமா.. ஷோரூம்ல குவிய போறாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றே ஃப்ரான்க்ஸ் (Fronx) ஆகும். இந்த கார் மாடலிலேயே வெலாசிட்டி எடிசன் (Velocity Edition) எனும் சிறப்பு பதிப்பை மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

வழக்கமான ஃப்ரான்க்ஸைக் காட்டிலும் அதிக அலங்காரங்களைக் கொண்டதாகவே இந்த வெலாசிட்டி எடிசன் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. பலினோவின் கிராஸோவர் வெர்ஷனே ஃப்ரான்க்ஸ் ஆகும். இது ஓர் 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். அதிக ஸ்போர்ட்டியான தோற்றமே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

Maruti suzuki fronx

இதற்கு கூடுதல் கவர்ச்சி மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வெர்ஷனாகவே ஃபாரன்க்ஸின் இந்த வெலாசிட்டி எடிசன் உள்ளது. வெலாசிட்டி எடிசனை ஃபாரன்க்ஸின் குறிப்பிட்ட தேர்வுகளில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். டெல்டா பிளஸ், ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகியவை அவை ஆகும்.

வழக்கமான ஃப்ரான்க்ஸைக் காட்டிலும் ரூ. 43 ஆயிரம் அதிக விலையில் வெலாசிட்டி எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், டர்போ வேரியண்டுகளுக்கு இந்த ஆக்சஸரீஸ் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. வெலாசிட்டி எனும் பதிப்பின்கீழ் 16 விதமான தனித்துவமான அணிகலன்களையே மாருதி சுஸுகி வழங்குகின்றது.

Maruti suzuki fronx rear

கிரே மற்றும் சிவப்பு நிறத்தில் அவை இருக்கும். விஷர், ஃப்ரண்ட் பம்பர், ஓஆர்விஎம் கவர் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதுதவிர, ஹெட்லேம்ப் கார்னிஷ், பாடி சைடு மோல்டிங், இலுமினேட் டோர் சில் குவார்டு, ஸ்பாய்லர் எக்ஸ்டென்டர், வீல் ஆர்ச் கார்னிஷ், கிரில் கார்னிஷ் மற்றும் பின் பக்க டோர் கார்னிஷ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இத்துடன், காரின் உட்பக்கத்தை அலங்கரிக்கும் சில அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன. சிவப்பு நிற டேஷ் டிசைனர் மேட், நெக்ஸ் கிராஸ் போர்டியக்ஸ் ஃபினிஷ் ஸ்லீவ் சீட் கவர் அல்லது பிளாக் ஃபினிஷ் சீட் கவர், இன்டீரியர் ஸ்டைலிங் கிட் மற்றும் 3டி பூட் மேட் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இந்த அம்சங்களே வழக்கமான ஃப்ரான்க்ஸிடம் இருந்து ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டியை வேறுபடுத்திக் காட்சிப்படுத்துகின்றது. இதைதவிர வேறு எந்த மாற்றத்தையும் ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஃப்ரான்க்ஸ் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போ 2023 வாயிலாகவே வெளியீடு செய்யப்பட்டது.

அப்போதே பலரின் மனம் கவர்ந்த காராக அது மாறிவிட்டது. இதேபோல் இப்போதும் விற்பனையில் அந்த கார் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது. இது விற்பனைக்கு வந்து ஒரு வருடத்திற்கும் குறைவான மாதங்களே ஆகின்றநிலையில், சுமார் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை ஃப்ரான்க்ஸ் எட்டியிருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை மாருதி சுஸுகி காட்சிப்படுத்தியிருந்தாலும், ஏப்ரல் மாதத்திலே அதிகாரப்பூர்வமாக ஃப்ரான்க்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட இந்த காரில் சிறப்பம்சங்களுக்கு சற்றும் பஞ்சமில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எச்டி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதில் ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்தவரை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃப்ரான்க்ஸ் காருக்கும் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வரவேற்பை புதிய வெலாசிட்டி எடிசன் இரட்டிப்பாக்கும் என்பதே நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இது எந்த மாதிரியான வரவேற்பை நாட்டும மக்கள் மத்தியில் பெறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 18:02 [IST]
English summary
Maruti launched fronx velocity edition in india here is price special features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+