ஃப்ரான்க்ஸின் சிறப்பு பதிப்பை இவ்ளோ கம்மி விலையில் வாங்க முடியுமா? மாருதியோட மனசு மாறுறதுக்குள்ள வாங்கிடுங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஃப்ரான்க்ஸ் (Fronx)-ம் ஒன்றாகும். பலினோ கார் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விற்பனைக்கு வந்த 10 மாதங்களிலேயே ஒரு லட்சம் யூனிட் எனும் மிகப் பெரிய விற்பனை சாதனையை இந்த கார் மாடல் படைத்தது. இத்தகைய கார் மாடலுக்கு கௌரவும் சேர்க்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஓர் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி (Fronx Velocity) எனும் பதிப்பையே அது அறிமுகம் செய்தது. டர்போ ட்ரிம்மில் மட்டுமே அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி பதிப்பை அனைத்து வேரியண்டுகளிலும் கிடைக்கின்ற வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Maruti fronx velocity edition

கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு மாருதி சுஸுகி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், ஃப்ரான்க்ஸ்-இன் அனைத்து தேர்வுகளிலும் வெலாசிட்டி சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 7 லட்சத்து 29 ஆயிரம் எனும் ஆரம்ப விலையில் இருந்தே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

சிஎன்ஜி தேர்விலும் இந்த வெலாசிட்டி பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான அலங்கார அணிகலன்களைக் கொண்டதே வெலாசிட்டி பதிப்பு ஆகும். வேரியண்டிற்கு ஏற்ப கூட-குறைய அலங்கார அணிகலன்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், சிவப்பு மற்றும் கருப்பு நிற பம்பர்கள், அழகிய ஹெட்லேம்ப், கவர்ச்சி கூட்டப்பட்ட வீல் ஆர்ச், முன் கிரில், பாடி பேனல்கள், சைட் மோல்டிங் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், கதவுகளில் ஒளிரக் கூடிய அம்சம், டிசைனர் மேட், ஸ்பாய்லர் எக்ஸ்டெண்டர், டோர் வைசர், பிரத்யேக ஓஆர்விஎம் ஆகியவை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

இதுமாதிரியான கணிசமான கூடுதல் அலங்காரங்களைக் கொண்டதே வெலாசிட்டி ஆகும். இதையே ஃப்ரான்க்ஸின் அனைத்து வேரியண்டுகளிலும் மாருதி சுஸுகி அறிமுகம் செய்திருக்கின்றது. வெளிப்புறத்தைப் போல வெலாசிட்டி பதிப்பின் உட்பக்கமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவையே வழக்கமான ஃப்ரான்க்ஸிடம் இருந்து ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டியை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஃப்ரான்க்ஸ் ஆட்டோ எக்ஸ்போ 2023லேயே முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டது. அன்றைய தினமே அதை விற்பனைக்கும் மாருதி சுஸுகி அறிமுகம் செய்துவிட்டது. இப்போது மக்கள் மனம் கவர்ந்த காராக இது காட்சியளிக்கின்றது.

இந்த நிலையிலேயே அதற்கு சிறப்பு சேர்க்கின்ற முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த காரில் 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எச்டி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு போன்ற நவீன கால அம்சங்கள் பலவும் ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி-யில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்தவரை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி பலினோவைப் போலவே ஃப்ரான்க்ஸ் காருக்கும் இந்தியாவில் ஃபேன்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். இந்த நிலையிலேயே கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு வெலாசிட்டி பதிப்பின் விலையை புதிய தேர்வுகளில் அறிமுகம் செய்ததன் வாயிலாக மிகக் கடுமையாக குறைத்துள்ளது மாருதி சுஸுகி.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 23:32 [IST]
English summary
Maruti launched fronx velocity edition starting at rs 7 29 lakhs here is more details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+