40 கி.மீ மைலேஜ் தரும் புது இன்ஜினை தயாரிக்கப்போகும் மாருதி! பலேனோ கார்ல வரப்போகும் அப்டேட்!

மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் புதிய தலைமுறை பலேனோ காரையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி புதிய அப்டேட்டுடன் வரும் ஃபிராங்க்ஸ் காரிலும் புதிய தலைமுறை பலேனோ காரிலும் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது தயாரிப்பில் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி எஸ்யூவி ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் மாருதி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி மாருதி நிறுவனம் சொந்தமாக ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக நமக்கு தெரியவந்துள்ளது.

new gen baleno

அதன்படி மாருதி நிறுவனம் தனது பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்களில் இந்த ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உட்பகுத்தி புதிய காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வரும் 2025-ம் ஆண்டு மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் அப்டேட் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இதற்காக மாருதி நிறுவனம் சொந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தை ஹச்இவி என்ற தொழில்நுட்பம் என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து தற்போது அந்நிறுவனம் தயாரிக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை விட அதிக மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்படுகிறது. அதே நேரம் இந்த தொழில்நுட்பத்தை உட்படுத்துவதால் வாகனத்தின் விலையும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

new gen baleno

மாருதியின் புதிய ஸ்டிராங்க் தொழிற்நுட்பம் பெட்ரோல் ஜெனரேட்டர் மூலம் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் காரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வளவு பவரை பேட்டரியிலிருந்து எடுக்க வேண்டும்? எவ்வளவு பவரை நேரடியாக பெட்ரோலில் இருந்து எடுக்க வேண்டும்? என்பதை அதுவே முடிவு செய்து அதிக மைலேஜ் தரும் வகையில் அதுவே தன்னை மாற்றிக் கொண்டு பவரை எடுத்துக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப்படுகிறது.

இதனால் இது மற்ற கார்களைவிட அதிக மைலேஜ் தரும் கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது0 இதற்காக 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் தான் மாருதியின் புதிய ஃப்ராங்க்ஸ் காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரிலும் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

new gen baleno

மாருதி நிறுவனம் வரும் 2026-ம் ஆண்டு தனது பலேனோ காரின் புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அந்த காரிலும் இதே இன்ஜின் தான் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மை புதுப்பிக்கும் போது ஹைபிரிட் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் வகையில் இது இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்ஜினுடன் மாருதி நிறுவனம் ஃபிராங்க்ஸ் ஃபேஸ்லிப்ஃட் அல்லது ஸ்விஃப்ட் ஆகிய கார்களை முதலில் அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. பெரும்பாலான வாய்ப்புகள் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்கள் மூலம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என தெரிகிறது.

மாருதி நிறுவனம் புதிய எம்பிவி ரக காரை ஸ்பேசியா காரின் அடிப்படையாக வைத்து தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இவிஎக்ஸ் என்ற காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கான்செப்ட் வெர்ஷன் கார்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிமுகமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட்டுவிட்டு மற்ற தொழில்நுட்பங்கள் கொண்ட கார்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. மாருதி நிறுவனம் தற்போது ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் ஹைபிரிட் கார்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெறும் என அந்நிறுவனம் நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 15:11 [IST]
English summary
Maruti new gen baleno 2026 strong hybrid engine expected
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X