இந்த மாருதி காரை வாங்குனா ரூ1.05 லட்சம் மிச்சமாகும்! கார் வாங்க இது நல்ல வாய்ப்பு!

மாருதி நிறுவனம் தனது நெக்ஸா பிராண்டின் கீழ் விற்பனையாகும் கார்களுக்கான தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு தயாரான கார்களுக்கு ரூபாய் 44 ஆயிரம் வரையிலும் 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு ரூபாய் 17,000 முதல் 1.05 லட்சம் வரையிலும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 44 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காருக்கான தள்ளுபடி ஆகும் 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தற்போது ஸ்டாக்கில் உள்ள காருக்கு ரூபாய் 89 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Nexa Discount

அடுத்ததாக பலேனோ காருக்கு ரூபாய் 42 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தற்போது ஸ்டாக்கில் உள்ள காருக்கான தள்ளுபடி ஆகும் 2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காருக்கு ரூபாய் 27 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சியாஸ் காரை பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டு ஸ்டாக்கில் உள்ள காரருக்கு தற்போது ரூபாய் 53,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2024 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் என்றால் அதற்கு ரூ 28,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே குறைவாக மாருதி ஃபிராங்க்ஸ் காருக்கான தள்ளுபடி தான் இருக்கிறது.

Maruti Nexa Discount

2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஃபிராங்க்ஸ்காருக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் கிடையாது. இதுவே 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தற்போது ஸ்டாக்கில் உள்ள காருக்கு ரூபாய் 15,000 தள்ளுபடி இதுவும் டர்போ வேரியன்டிற்கு மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற வேரியன்டிற்கு எந்த விதமான தள்ளுபடிகளும் கிடையாது.

மாருதி நிறுவனத்தின் கிராண்டுவிட்டாரா காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு ஸ்டாக்கில் உள்ள கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி ஆகும். இதுவே 2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு காருக்கு ரூபாய் 20,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இது தற்போது மார்க்கெட்டு நன்றாக விற்பனையாகி வரும் கார் என்பதால் பலர் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது.

Maruti Nexa Discount

அடுத்ததாக ஜிம்னி காரை பொருத்தவரை 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தற்போது ஸ்டாக்கில் உள்ள காருக்கு ரூபாய் 1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவே 2024 ஆண்டு தயாரிக்கப்பட்ட காருக்கு வெறும் ரூபாய் 5000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ 1.05 லட்சம் என்ற தள்ளுபடி வெறும் ஆல்ஃபா வேரியன்ட் காருக்கான தள்ளுபடி தான். இதுவே ஸீட்டா வேரியண்ட் கார் என்றால் ரூபாய் 55 ஆயிரம் மட்டுமே தள்ளுபடியாக வழங்கப்படும். இந்த காருக்கு கடந்த மாதம் ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Maruti Nexa Discount

இந்த தள்ளுபடிகள் எல்லாம் வேரியண்டை பொருத்தும் மாடலை பொருத்தும் மாறுபடும். மேலும் 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தற்போது ஸ்டாக்கில் உள்ள கார்களுக்கு வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி என்பது தற்போது அந்த அந்த பகுதியில் ஸ்டாக்கில் இருக்கும் வாகனங்களை பொறுத்து கிடைக்கப்பெறும். ஸ்டாக்கில் வாகனங்கள் இல்லை என்றால் இந்த தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்பில்லை.

இந்த டிசம்பர் மாதமே வாகனங்களுக்கு அதிக அளவில் தள்ளுபடிகளை வழங்கிய நிலையில் தற்போது ஜனவரி மாதம் வாகனங்களின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதமும் விற்பனையை அதிகரிக்க பல்வேறு தள்ளுபடிகளை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நெக்ஸான் பிராண்டில் கார் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

முக்கியமாக 2023-ம் ஆண்டு இறுதி தயாரிக்கப்பட்டு ஸ்டாக்கில் உள்ள கார்களுக்கு வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி அதிகமாக இருப்பதால் அந்த ரக கார்களை தேர்வு செய்து வாங்கினால் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக பணம் சேமிக்க வாய்ப்பு உள்ளது. ஜிம்னி காரில் சுமார் ரூ 1 லட்சத்திற்கும் மேல் சேமிக்க வாய்ப்பு உள்ளதால் பலர் அதை தேர்வு செய்வார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்து 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஸ்டாக்கில் உள்ள கார்களை விற்பனை செய்ய அதிகமான தள்ளுபடிகளை வழங்கும். பழைய ஸ்டாக்குகள் கையில் இருந்தால் அது 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காராக கருதப்படும் என்பதால் அந்த சாக்கை இந்த மாதமே விற்கு தீர்க்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்யும். அதன் காரணமாகவே மாருதி நிறுவனமும் இந்த தள்ளுபடிகளை வழங்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 12:04 [IST]
English summary
Maruti nexa discount january 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X