ரூ74,000 மிச்சம் பண்ணலாம்! மாருதி கார்களை வாங்க இது தான் நல்ல டைம்!

மாருதி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யும் கார்களுக்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது அதன்படி ரூபாய் 74 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுபோக கூடுதலாக பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியாக நீங்கள் இந்த மாதம் மாருதி நிறுவனத்தின் காரை வாங்கப் போவதாக இருந்தால் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாருதி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம் வழியாக தனது பிரீமியம் ரக கார்களை எல்லாம் விற்பனை செய்து வருகின்றன. முக்கியமாக இந்த ஷோரூம் வழியாக இக்னீஷ், பலேனோ, சியாஸ், ஜிம்னி, ஃபிராங்க்ஸ், எக்ஸ்எல் 6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த கார்களுக்கான இந்த மே மாத தள்ளுபடி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

maruti nexa may 2024 discount

தள்ளுபடியைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதன்படி நேரடி கேஸ் தள்ளுபடி எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி என தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி மாருதி இக்னீஸ் காருக்கு நேரடியாக ரூபாய் 40,000 கேஷ் தள்ளுபடியும், ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனஸூம், ரூபாய் 3,000 கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூபாய் 58 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நேரடியாக ரூபாய் 30,000 கேஷ் தள்ளுபடியும், ரூபாய் 25000 எக்ஸ்சேஞ்ச் போனஸூம், ரூபாய் 5000 கார்ப்பரேட் தள்ளுபடியும் என மொத்த ரூபாய் 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடுத்ததாக மாருதி சியாஸ் காரை பொறுத்தவரை ரூபாய் 20,000 கேஸ் தள்ளுபடியும் ரூ 25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸூம் ரூபாய் 3,000 கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூபாய் 48ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

maruti nexa may 2024 discount

ரூபாய் 50,000 கேஷ் தள்ளுபடி மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அடுத்ததாக ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை ரூபாய் 10,000 கேஷ் தள்ளுபடியும், ரூபாய் 3000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. இதற்கு கார்பரேட் தள்ளுபடிகள் இல்லை. இருப்பதிலேயே குறைவான தள்ளுபடி இந்த காருக்கு தான் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக எக்ஸ்எல்6 கார் தான் இருக்கிறது. இந்த காருக்கு ரூபாய் 20,000 கேஷ் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதற்கு எக்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இறுதியாக கிராண்ட் விட்டாரை பொருத்தவரை ரூ20,000 கேஸ் தள்ளுபடியும், ரூபாய் 50,000 எக்ஸ்சேஞ்ச் போனதும் ரூ4000 கார்பரேட் தள்ளுபடியும் என மொத்த ரூ74 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது பதிலையே அதிகபட்சமாக இந்த காருக்கு தான் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

maruti nexa may 2024 discount

இதில் நேரடியாக கேஸ் தரும்படி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி என்பது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வரும் காரை விற்பனை செய்துவிட்டு புதிய காரை வாங்க நினைத்தால் உங்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். ஒருவேளை நீங்கள் பழைய காரை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய காரை வாங்க நினைத்தால் உங்களுக்கு இந்த எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்காது. அதற்கு பதிலாக ஸ்கிராப் தள்ளுபடி தான் கிடைக்கும்.

மாருதி நிறுவனத்தை பொருத்தவரை புதிய கார் வாங்கும் போது ஏற்கனவே பழைய கார் ஸ்கிராப் செய்தவர்களுக்கு ரூபாய் 55,000 வரை ஸ்கிராப் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் தள்ளுபடி என்பது நீங்கள் நேரடியாக கார்பரேட் பெயரில் புதிய காரை வாங்கும்போது, உங்களுக்கு அந்த தள்ளுபடி பொருந்தும். தனிநபர் வாங்கும் போது உங்களுக்கு கார்பெட் தள்ளுபடிகள் கிடைக்காது.

maruti nexa may 2024 discount

மேலும் இதில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியில் வாகனத்தை எடுக்கும்போது நீங்கள் மாருதி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்களில் விற்பனையாகும் கார்களை விற்பனை செய்து விட்டு நெக்ஸா ஷோரூமில் விற்பனையாகும் கார்களை வாங்கினால் உங்களுக்கு கூடுதலாக ரூபாய் 10,000 தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதே நேரம் நீங்க ஹுண்டாய் நிறுவனத்தின் காரை பயன்படுத்தி மீண்டும் அதை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம் காரை வாங்கினாலும் உங்களுக்கு கூடுதல் ரூ10,000 தள்ளுபடி கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனையாகும் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது ஒரு பிரீமியம் செக்மென்ட் வாகனங்கள் என்பதால் இதில் ஏகப்பட்ட அம்சங்களை மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு தள்ளுபடி வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்த நிறுவனம் முயற்சி செய்து வருவது நிச்சயம் பாராட்டத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 14:52 [IST]
English summary
Maruti nexa may 2024 discounts baleno jimny xl6
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X