27 லட்சம் பேர் இந்த இடத்துல கார் வாங்கிட்டாங்க! 9 வருஷத்துல இப்படி ஒரு சாதனையை செய்த மாருதி!

மாருதி நிறுவனம் நெக்ஸா டீலர் ஷிப் மூலம் 27 லட்சம் கார்களை விற்பனை செய்து முக்கிய மைல்களை எட்டி பிடித்துள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிரீமியம் செக்மெண்டிற்க்காக நிறுவனம் பிரத்தியேகமாக உருவாக்கிய நெக்ஸா டீலர் ஷிப்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2015ம் ஆண்டு மாருதி நிறுவனம் தனது பிரீமியம் ரக கார்களுக்காக நெக்ஸா என்ற டீலர்ஷிப்பை தனியாக உருவாக்கியது. இதில் பிரிமியம் ரக கார்கள் விற்பனையாகி வருகிறது. இதன்படி மாருதி நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு மாஸ் மார்க்கெட் கார்கள் எல்லாம் அரேனா டீலர் மூலமும் பிரீமியம் மார்க்கெட் கார்கள் முழுவதும் நெக்ஸா டீலர் ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

maruti nexa 27 lakh sales

இந்நிலையில் நெக்ஸா டீலர் ஷிப்கள் உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது மாருதி நிறுவனம் இந்த டீலர் ஷிப்கள் மூலம் மட்டும் மொத்தம் 27 லட்சம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாருதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 32 சதவீதம் நெக்ஸா ஷோரூம்கள் மூலம் மட்டுமே நடப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா டீலர் ஷிப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளன. 54 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பதிலேயே அதிகமாக பலேனோ என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார் தான் நெக்ஸா டீலர் ஷிப்புகள் மூலம் அதிகம் விற்பனையான காராக இருக்கிறது. கடந்த 27ம் ஆண்டு முதல் சியாஸ் கார் டீலர்கள் மூலம் விற்பனையாகி வருகிறது.

maruti nexa 27 lakh sales

இந்நிறுவனம் தற்போது தனது நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் இக்னீஷ், பலேனோ, ஃபிராங்க்ஸ், ஜிம்னி, எக்ஸ்எல் 6, கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களை விற்பனை செய்வதற்காக இந்தியா முழுவதும் சுமார் 498 நிறுவனம் நியமித்துள்ளது. சுமார் 300 நகரங்களில் இது செயல்பட்டு வருகின்றன.

பிரீமியம் வாகனங்களுக்கான தனி பிராண்ட் மற்றும் பிரீமியம் அல்லாத வாகனங்களுக்கான தனி பிராண்ட் என பிரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த ரக வாகனங்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை பிரித்து அவர்களுக்கான ஷோரூம் அனுபவத்தை வழங்குவதற்காகவே இப்படியான நடைமுறையை மாருதி நிறுவனம் பின்பற்றி வருகிறது.

maruti nexa 27 lakh sales

பிரீமியம் கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு வித்தியாசமான ஷோரூம் அனுபவம் தேவைப்படும். பிரிமியம் அல்லாத வாகனங்களை வாங்க விரும்புபவர்களுக்கு வேறு விதமான ஷோரூம் அனுபவம் தேவைப்படும் என்பதால் இந்த நடைமுறையை மாருதி நிறுவனம் பின்பற்றி வருவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது நமக்கு இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நெக்ஸா டீலர்ஷிப்புகள் புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்து இருப்பது மாருதி நிறுவனத்திற்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. பிரீமியம் கார்களை மக்கள் அதிகம் விரும்பும் துவங்கியுள்ளார்கள் என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. மாருதி நிறுவனத்திற்கு இதன் மூலம் அதிக வருமானம் கிடைத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 12:20 [IST]
English summary
Maruti nexa records 27 lakh unit sales under 9 years
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X