அதிகம் மைலேஜ் தரும் மாருதி சிஎன்ஜி கார் மாடல் எதுனு உங்களுக்கு தெரிமா? பைக்குகளுக்கே சவால் கொடுக்கும் கார்கள்

இந்தியாவில் சிஎன்ஜி (CNG)-யில் இயங்கும் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி வாகனங்களுக்கு டிமாண்ட் மிக அமோகம். குறிப்பாக, மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் சிஎன்ஜி வாகனங்களே அதிகம் ரேஞ்ச் தரக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) இதற்கு ஓர் சிறந்த உதாரணம் ஆகும். நிறுவனம் அதன் மற்ற தயாரிப்புகளைப் போலவே இதிலும் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது.

இதுவும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவே இருக்கின்றது என்பது ஆச்சரியத்தின் உச்சம். இதைபோலவே வேறு எந்தெந்த மாருதி சுஸுகியின் சிஎன்ஜி கார்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Maruti s most fuel-efficient cng car s

செலிரியோ சிஎன்ஜி (Celerio CNG): மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்ஜி கார் மாடல்களிலேயே செலிரியோ சிஎன்ஜிதான் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இது ஒரு கிலோவிற்கே 34.43 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் தருமாம். இந்தியாவில் வேறு எந்த சிஎன்ஜி காரிலும் இந்த அளவிற்கு அதிகம் மைலேஜை எதிர்பாக்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. செலிரியோ சிஎன்ஜி ரூ. 6,73,448 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வேகன்ஆர் சிஎன்ஜி (Wagon R CNG): இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. இந்த காரிலும் சிஎன்ஜி தேர்வை மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கே 34.05 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு 'டால் பாய்' என்கிற செல்ல பெயர் உண்டு என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன் ரூ. 6.44 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆல்டோ கே10 சிஎன்ஜி (Alto K10 CNG): இந்தியாவில் மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இதவும் ஒன்றாகும். சொல்லப்போனால் நிறுவனத்தின் மிக விலை குறைவான கார் மாடலும் இதுவே ஆகும். இந்த காரிலும் சிஎன்ஜி தேர்வை வழங்க மாருதி சுஸுகி தவறவில்லை.

இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 33.85 கிலோ மீட்டர் வரையில் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் சிஎன்ஜி தேர்வு ரூ. 5.73 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய தலைமுறை டிசையர் சிஎன்ஜி (Dzire CNG): இந்த காரின் வெளியீட்டு நிகழ்வே சமீபத்தில் அரங்கேறியது. இந்த காரை அதிகாரப்பூர்வமாக நவம்பர் 11 ஆம் தேதி அன்றே மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் மைலேஜ் விபரத்தை மாருதி அறிவித்தது.

இதன்படி, ஒரு கிலோ சிஎன்ஜிக்கே புதிய டிசையர் 33.73 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், மாருதி சுஸுகியின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே இதன் விலை விபரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜியில் இயங்கும் எந்த கார் மாடல் அதிகம் மைலேஜ் தரும் என்பதே பலரின் கேள்வியாக இங்கே இருந்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மைலேஜ் விரும்பிகள் பலன்பெறும் நோக்கில் இந்த தகவலை இங்கே தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இது புதிதாக சிஎன்ஜி காரை வாங்க நினைப்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 23:01 [IST]
English summary
Maruti s most fuel efficient cng car s list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+