சின்ன காரையெல்லாம் தூர போடுங்க! மாருதியின் எஸ்யூவி கார்களை தேடி தேடி வாங்கும் மக்கள்! ஏன் தெரியுமா?
மாருதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், கடந்த மாதம் இந்நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகனங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மினி மற்றும் காம்பேக்ட் செக்மென்ட்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மே மாதம் துவங்கியுள்ள நிலையில், தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மாருதி நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது மாருதி நிறுவனம் ஒட்டுமொத்தமாக பயணிகள்,கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை எல்லாம் சேர்த்து மொத்தமாக 1,68,089 வாகனங்களை கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்துள்ளது அதில் 1,40,448 வாகனங்கள் உள்நாட்டிலும், 5481 வாகனங்கள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விற்பனையில் பயணிகள் வாகன விற்பனையை மட்டும் பார்க்கும்போது கடந்த ஏப்ரல் மாதம் 1,37,952 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,37,320 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது 0.46 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் விற்பனையான 1,52,718 என்ற விற்பனையை ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் மாதத்தில் 10.08 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பயணிகள் வாகன செக்மெண்டில் உள்ள விபரங்களை பற்றி பார்க்கும்போது மினி, காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் ஆகிய செக்மென்ட்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 11,519 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையான 14,110 என்ற விற்பனையை ஒப்பிடும்போது குறைவுதான்.

அடுத்ததாக காம்பேக்ட் செக்மென்டை பொறுத்தவரை மாருதி நிறுவனம் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், வேகன்ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இத்தனை கார்களும் மொத்தமாக சேர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 56,953 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 74,935 கார்கள் விற்பனையாகி இருந்தது.
இந்த விற்பனை சரிவிற்கு காரின் வருகையும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. வரும் 9ம் தேதி புதிய கார் விற்பனைக்கு வர உள்ளது. அதனால் தற்போது ஸ்விஃப்ட் காரின் விற்பனை இல்லாமல் இருக்கிறது. இதுபோக டிசையர் காரும் ஜூன் மாதம் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார்கள் வந்த பின்பு இந்த செக்மென்ட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

சியாஸ் என்ற ஒரே காரை மட்டும் தான் மிட் சைஸ் செக்மெண்டில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த காரை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 867 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,017 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது இந்த செக்மெண்ட் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.
அடுத்ததாக யூட்டிலிட்டி வாகன செக்மெண்டை பொருத்தவரை மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் அத்தனை கார்களும் சேர்த்து 56,553 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 36,751 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது சிறப்பான வளர்ச்சியை இந்த செக்மெண்ட் பெற்றுள்ளது.
அடுத்ததாக வேன் செக்மென்டை பொறுத்தவரை மாருதி நிறுவனம் ஈகோ என்ற வாகனத்தை தான் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 12,060 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10,504 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது இதில் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் கமர்சியல் வாகன மார்க்கெட்டை பொருத்தவரை சூப்பர் கேரி என்ற ஒரே ஒரு வாகனத்தை தான் விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம் கடந்த ஏப்ரல் மாதம் 2496 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2199 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்த செக்மெண்டும் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் பயணிகள் வாகனம், கமர்சியல் வாகனம், டொயோட்டா உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுக்காக தயாரித்து வழங்கும் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன விற்பனையை ஒப்பிட்டு அதை இந்திய விற்பனையுடன் மட்டும் மதிப்பீடு பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் மாதம் 1,45,929 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,43,558 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. இதனால் ஓரளவுக்கு விற்பனை வளர்ச்சியை தான் சந்தித்துள்ளது.
ஏற்றுமதி விவகாரத்திலும் இந்நிறுவனம் 22,160 வாகனங்களை கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத ஏற்றுமதியை ஒப்பிடும்போது அப்பொழுது 16,971 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. இதுவும் வளர்ச்சியை தான் சந்தித்துள்ளது. ஏற்றுமதியில் மாருதி நிறுவனம் தான் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பான விற்பனையை செய்திருந்தாலும், பயணிகள் வாகன செக்மெண்டில் மினி, காம்பேக்ட், மிட் சைஸ் ,ஆகிய செக்மெண்ட்களில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமான விற்பனை சரிவு தான். மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் வந்தால் இந்த செக்மெண்ட் வளர்ச்சியை பெற வாய்ப்பு உள்ளது. மற்றபடி வழக்கமான ஒரு மாதமாகவே மாருதி நிறுவனத்திற்கு இருந்துள்ளது.


Click it and Unblock the Notifications









