மாருதி காரை வாங்கும் மக்கள் குறைந்தனர்! ஒரே வருஷத்துல இவ்வளவு அடியா?
மாருதி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி அன்ன நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1,81,782 வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1,45,570 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 26,003 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
செப்டம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன விற்பனை நிறுவனங்கள் தங்கள் ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மாருதி நிறுவனமும் தனது விற்பனை விபரங்களை முழுமையாக வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனம் எந்தெந்த செக்மெண்டில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது.

முதலாவதாக மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் மொத்தம் 10,648 வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 12,209 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது இந்த செக்மெண்டில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக காம்பேக்ட் செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர். இக்னீஷ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் எல்லாம் சேர்த்து மொத்தமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 58,051 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 72,451 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது இந்த செக்மெண்டிலும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக மிட்-சைஸ் செக்மென்ட்டை பொருத்தவரை மாருதி நிறுவனம் சியாஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 707 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 849 கார்கள் விற்பனையாகி இருந்தது இந்த சைட் மட்டும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. இந்த காருக்கு பிரத்தியேகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அடுத்ததாக யூட்டிலிட்டி என்ற எஸ்யூவி ரக வாகன செக்மென்டை பொறுத்தவரை பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல் சிக்ஸ் ஆகிய கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 62,684 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 58,746 வாகனங்கள் தான் விற்பனையாகிறது. தற்போது இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரித்துள்ளது.

வேன் செக்மெண்டை பொருத்தவரை இந்நிறுவனம் ஈக்கோ என்ற ஒரே ஒரு வாகனத்தை தான் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10,985 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11,859 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. இந்த வாகனமும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.
அடுத்ததாக இலகுரக கமர்சியல் வாகன செக்மென்டை பொறுத்த வரை இந்நிறுவனம் சூப்பர் கேரி என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 2495 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2564 கார்கள் விற்பனை ஆகியிருந்தது. தற்போது இந்த செக்மெண்டிலும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு வாகனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி அந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 10,209 வாகனங்களை இப்படி விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5790 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது இதில் இரண்டு மடங்கு அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்நாட்டில் மொத்தமாக 1,55,779 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,64,468 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனையில் உள்நாட்டில் சரிவை சந்தித்துள்ளது. ஏற்றுமதியை பொருத்தவரை மாருதி நிறுவனம் மற்றும் 26,003 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதம் 24,614 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது ஏற்றுமதியில் வளர்ச்சி பெற்று உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனை செய்து நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் சமீப நாட்களாக விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விற்பனை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக மக்கள் மத்தியில் வாகனங்கள் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









