யாருமே இதை எதிர்பார்க்கல! ஜூலை மாதம் விற்பனை சரிவை சந்தித்த மாருதி!

மாருதி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1,7,0 41 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1,81,630 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 3.63 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது? எத்தனை கார்களை மற்ற நிறுவனங்களுக்காக தயாரித்து விற்பனை செய்துள்ளது? மற்றும் ஏற்றுமதி எவ்வளவு செய்துள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்ட நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி மாருதி நிறுவனமும் கடந்த ஜூலை மாதம் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்ற விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3.63 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவை சந்தித்துள்ளது நமக்கு தெரியவந்துள்ளது.

maruti sales july 2024

மாருதி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1,75,041 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து உள்ளது. இதில் 1,40,354 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகி உள்ளன. 10,702 வாகனங்கள் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனத்திற்காக தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. 23,985 வாகனங்கள் ஏற்றுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மாதிரி நிறுவனம் மினி செக்மெண்டில் தற்போது ஆல்டோ, எக்ஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் மொத்தமாக 9960 கார்கள் கடந்த ஜூலை மாதம் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 9590 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 3.85% இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரித்துள்ளது.

maruti sales july 2024

கம்பேக்ட் செக்மென்டை பொறுத்தவரை மாருதி நிறுவனம் தற்போது பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 58,682 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 67,102 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 12.54 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மிட்-சைஸ் செக்மெண்டில் சியாஸ் என்ற செடான் காரை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது0 கடந்த ஜூலை மாதம் மொத்தம் 603 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1348 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது இந்த விற்பனை 55.26 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் செடான் கார்களின் விற்பனை கணிசமான அளவு சரிவே சந்தித்து வருகிறது, குறிப்பிடத்தக்கது.

maruti sales july 2024

அடுத்ததாக யூட்டிலிட்டி செக்மென்ட் வாகனத்தை பொருத்தவரை மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் எல்லாம் மொத்தம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 56,302 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 62,049 வாகனங்கள் விற்பனையாகிறது. தற்போது 9.26 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

வேன் செக்மெண்டில் மாருதி நிறுவனம் ஈக்கோ என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 11,916 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 12,037 வாகனங்கள் விற்பனையாகிறது. தற்போது ஒரு சதவீதம் அளவுக்கு இந்த வாகனத்தின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

இலகுரக கமர்சியல் வாகன செக்மெண்டில் மாருதி நிறுவனம் சூப்பர் கேரி என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 2,891 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 259 வாகனங்கள் விற்பனையாகிவிட்டது. இது 12.97% விற்பனை அதிகமாகும். மாருதி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்திற்கு மட்டும் கடந்த ஜூலை மாதம் 10,702 கார்களை தயாரித்து விற்பனை விற்பனை செய்துள்ளது.

மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி மாருதி நிறுவனத்தின் எர்டிகா, பலேனோ மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகிய மாடல் கார்களை டொயோட்டா நிறுவனத்தின் பெயரில் மறுவடிவமைப்பு செய்து மாருதி நிறுவனமே தயாரித்து வழங்குகிறது. டொயோட்டா நிறுவனம் இந்த கார்களை வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.

மாருதி நிறுவனம் ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் மொத்தம் 23,985 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 22,199 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது 8.04 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் கணிசமான அளவு விற்பனை சர்வீஸ் சந்தித்துள்ளது. இது மாதிரி நிறுவனத்தின் விற்பனைக்கு கிடைத்த முதல் அடியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த விற்பனை அதிகரிக்க மாருதி நிறுவனம் இந்த மாதம் பல்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 11:06 [IST]
English summary
Maruti sales july 2024 india 175000 units report
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X