ஹூண்டாய், டாடா எல்லாம் ஓரமா போ! எப்பவும் போல மாருதி தான் கிங்ன்னு மறுபடியும் நிரூபிச்சிட்டாங்க!

ஜூன் மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மாருதி நிறுவனமும் தனது விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் மாருதி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் மாருதி நிறுவனம் இருப்பதற்கு தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சியை சந்தித்து வருவதும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த மே மாதம் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 1,44,002 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 1.43,708 வாகனங்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. அதை ஒப்பிடும்போது 0.2 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாத விற்பனையான 1,37,952 என்ற விற்பனையை ஒப்பிடும்போது 4.39 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

maruti sales may 2025

மினி செக்மெண்டில் இந்நிறுவனம் ஆல்டோ மற்றும் எக்ஸ்பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்த செக்மெண்டில் கடந்த மே மாதம் 9,902 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2023ம் ஆண்டு மே மாதம் 12,236 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை என்பது வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக காம்பேட்க் செக்மென்டை பொறுத்தவரை இந்நிறுவனம் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் கடந்த மே மாதம் மொத்தம் 68,206 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 71,419 கார்கள் விற்பனையாக இருந்தது தற்போது இந்த செக்மெண்டிலும் விற்பனை என்பது சரிவை சந்தித்துள்ளது.

maruti sales may 2025

அடுத்ததாக மிட் சைஸ் செக்மென்டை பொறுத்த வரை மாருதி நிறுவனம் சியாஸ் என்ற ஒரே காரை தான் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த மே மாதம் 730 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே 2023ம் ஆண்டு மே மாதம் 992 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த செக்மெண்டிலும் இந்நிறுவனம் சரிவை தான் சந்தித்துள்ளது.

வாகனங்களை பொருத்தவரை நிறுவனம் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல் சிக்ஸ் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த மே மாதம் 54,204 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 46,243 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது இந்த செக்மெண்டில் நல்ல வளர்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

மாருதி நிறுவனம் ஈகோ என்ற ஒரே ஒரு வாகனத்தை மட்டும் தான் விற்பனை செய்து வருகிறது. கடந்த மே மாதம் மொத்தம் 10,960 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 12,818 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது இந்த செக்மெண்டிலும் சரிவை சந்தித்துள்ளது.

பயணிகள் வாகனத்தில் உள்நாட்டு விற்பனையை பொறுத்த வரை மாருதி நிறுவனம் 1,44,002 வாகனங்களை கடந்த மே மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே 2023ம் ஆண்டு மே மாதம் 1,43,708 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது ஓரளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது என்று சொல்லலாம்.

அடுத்ததாக இலகுரக கமர்சியல் வாகன பிரிவில் சூப்பர் கேரி என்ற காரை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த மே மாதம் 2692 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2888 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது லேசான சர்வே இந்நிறுவனம் சந்தித்துள்ளது எனக் கூறலாம்.

ஏற்றுமதியை பொறுத்தவரை இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 17,367 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கலந்து 2023ம் ஆண்டு மே மாதம் 26,477 வாகனங்களை ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது ஏற்றுமதியிலும் சரிவை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. மாருதி நிறுவனம் பல்வேறு செக்மென்ட்களில் சரிவை சந்தித்து வந்தாலும் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை பெற்றுள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை உள்ளிட்ட அனைத்து விற்பனையை எண்ணிக்கை பார்க்கும் போது கடந்த மே மாதம் 1,74,551 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 1,78,083 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இதுவும் விற்பனையில் ஓரளவு சரிவை தான் சந்தித்துள்ளது எனக் கூறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் ஒட்டுமொத்தமாக விற்பனையில் சிறிய சந்திப்பை சரிவை சந்தித்திருந்தாலும், உள்நாட்டு விற்பனையில் ஓரளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் எஸ்யூவி கார்களை அதிகமாக அறிமுகப்படுத்தி அதன் விற்பனையை அதிகப்படுத்தியதுதான் தற்போது சிறிய ரக கார்களின் விற்பனை சரீவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 7:00 [IST]
English summary
Maruti sales may 2025 uv sales grow mini compact sales decline analysis
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+