32 கி.மீ மைலேஜ் தரும் காரின் விலை வெறும் ரூ4.26 லட்சம் தானா! மாருதி எடுத்த அதிரடி ஆக்ஷன்!

மாருதி சுஸூகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரை நீங்கள் வாங்க திட்டமிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கு சரியான நேரம். மாருதி நிறுவனம் இந்த காரின் சில வேரியண்ட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. தற்போது இந்த கார் என்ன விலையில் விற்பனையாகி வருகிறது. இதை வாங்குவதால் எவ்வளவு பணம் மிச்சமாகிறது? இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் தனது எஸ்பிரெஸ்ஸோ காரின் விற்பனை அதிகரிப்பதற்காக தற்போது அதன் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு மட்டும் நிறுவனம் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த வேரியன்ட்கள் அதிகமாக விற்பனையாகும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. காரின் விற்பனை அதிகமானால் தான் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை அதிகமாகும். என்பதால் இந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.

maruti s-presso price cut

இதன்படி மாருதி எக்ஸ்பிரஸ் காரின் விஎக்ஸ்ஐ (ஓ) ஏஎம்டி மற்றும் விஎக்ஸ்ஐபிளஸ் (ஓ) ஏஎம்டி ஆகிய வேரியண்ட் கார்களின் விலையை ரூ5000 வரை குறைத்துள்ளது. தற்போது இந்த வேரியன்ட் கார்கள் முறையே ரூபாய் 5.71 லட்சம் மற்றும் ரூபாய் 6 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை எல்லாம் எக்ஸ்ஷோரும் விலைகள் தான். குறிப்பிட்ட இந்த வேரியண்ட்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வேரியண்டுகளுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் கிடையாது. மற்ற வேரியன்ட்கள் எல்லாம் இதற்கு முன்னர் என்ன விலையில் விற்பனையாகி வந்ததோ அதே விலையில் தான் தற்போது தொடர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த ஆஃபரை வாடிக்கையாளர்கள் நேரடியாக மாருதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஷிப்கள் அல்லது ஆன்லைன் வெப்சைட்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

maruti s-presso price cut

மாருதி சுஸூகி எஸ் பிரெஸ்ஸோ காரை பொறுத்தவரை மொத்தம் நான்கு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஸ்டாண்டர்ட், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஓ)ஆகிய வேரியன்ட்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதில் பேஸ் வேரியண்ட் ரூ4.26 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி வருகிறது. டாப் வேரியன்ட் ரூ6.11 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அதிகமாகி வருகிறது.

இந்த மாருதி சுஸூகி எஸ்பிரெஸ்ஸோ காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இதன் காம்பேக்டான டிசைன் மற்றும் மைலேஜ் தான் இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. இதுபோக மல்டி ஃபங்ஷன் ஸ்டேரிங் வீல், ஆட்டோமேட்டிக் ஏசி, பார்க்கிங் சென்சார், பவர் விண்டோ மற்றும் 7 இன்ச் கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம், வயர்லெஸ் கார் கனெக்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

maruti s-presso price cut

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், மல்டிபிள் ஏர் பேக், டைனமிக் கைடு லைன் உடன் கூடிய பார்க்கிங் சென்சார் உள்ளீட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த கார் குறைந்த விலையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகவும் இருக்கிறது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் கே10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது காருக்கு டீசென்டான பெர்ஃபார்மென்ஸ் செய்யும் சிறப்பான மைலேஜ் வாரி வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கார் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. சிறப்பாக மைலேஜ் தரும் காராக இது இருக்கிறது.

தற்போது மைலேஜ் என்பது இந்திய மக்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்பதால் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன்படி இந்த கார் சிஎன்ஜி ஆப்ஷனில் பைக் போல லிட்டருக்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் தருவது என்பது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல. இது இந்தியாவில் உள்ள மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற காராக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகி நிறுவனம் தனது எஸ்பிரெஸ்ஸோ காரை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறான அவர்களை அழித்து வருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே பலர் கார் வாங்கும் ஐடியாவில் இருந்தால் அவர்கள் உடனடியாக காரை வாங்குவார்கள் என இந்த ஆஃபரை வழங்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 18:11 [IST]
English summary
Maruti spresso price cut india know new prices
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X