ஒரு ஊரே உக்காந்து போகலாம்! மாருதி எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! டாடா பொழப்புல மண்ணை அள்ளி போட போகுது!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) கூட களமிறக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படவுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வேகமாக தயாராகி வருகிறது.

அது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகும். கடந்த 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அது மெருகேற்றப்பட்டு, டோக்கியோ (Tokyo) நகரில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ (Japan Mobility Show) நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

Maruti Suzuki eVX

ஜப்பான் மொபிலிட்டி ஷோ கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்றது. தற்போது இந்திய சாலைகளிலும், வெளிநாடுகளிலும் இந்த எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 550 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki eVX Interior Design

இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய தகவல் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் 5 சீட்டர் (5 Seater) கார் ஆகும். இதன் அறிமுகத்தை தொடர்ந்து 7 சீட்டர் (7 Seater) எலெக்ட்ரிக் கார் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அனேகமாக இது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் 7 சீட்டர் வெர்ஷனாக இருக்கலாம் எனவும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே இவிஎக்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, இந்த 7 சீட்டர் காரையும் மாருதி சுஸுகி களமிறக்கி விடும் என தெரிகிறது.

எனவே 2025ம் ஆண்டின் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை வெறும் 25 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ள அதே பேட்டரி ஆப்ஷன்தான் இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, வரும் 2026ம் ஆண்டின் மே மாதத்திற்குள் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றையும், 2026ம் ஆண்டின் இறுதிக்குள் எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) கார் ஒன்றையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையையும் ஒரு கை பார்க்க மாருதி சுஸுகி முடிவு செய்து விட்டது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), நிறுவனம்தான் முதல் இடத்தில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த முதல் இடத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் வடிவில் பெரும் ஆபத்து காத்து கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 22:57 [IST]
English summary
Maruti suzuki 7 seater electric car india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+