பணத்த மிச்சப்படுத்த என்னெல்லாம் பண்றாங்க! டிரெயின்ல நம்மளவிட மாருதி கார்கள்தான் அதிகம் டிராவல் பண்ணுது போலையே!
வாகன உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் வாகனங்களை நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்க அதிக அளவில் டிரக்குகளையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த நிலை தற்போது மிகப் பெரிய அளவில் மாறி இருக்கின்றது. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல தங்களின் தயாரிப்புகளை விற்பனையகங்களுக்கு அனுப்பி வைக்க ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு இந்தியன் ரயில்வேஸ் சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே ரயில்வேஸின் இந்த சேவை தற்போது மிகப் பெரிய அளவில் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது.
ரயில்வேஸை பயன்படுத்தி வாகன அனுப்பி வைப்பதனால் பலவழிகளில் வாகன உற்பத்தியாளர்களுக்கு நன்மை வந்து சேர்ந்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டிரக்குகளில் வாகனங்களை அனுப்பி வைக்கும்போது ரிஸ்க் அதிகம். மேலும், செலவும் மிக மிக அதிகமாக உள்ளது. அதுவே ரயில்வே வாயிலாக அனுப்பி வைக்கும்போது ரிஸ்க் மிகப் பெரிய அளவில் குறைவு.

இதேபோல், செலவும் மிக மிக குறைவு. இதனால்தான் மாருதி சுஸுகி இந்தியன் ரயில்வேஸை பயன்படுத்தி வாகனங்களை அனுப்பி வைப்பதை விரிவாக்கம் செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இதுவரை இந்தியன் ரயில்வேஸைப் பயன்படுத்தி 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை நாடு முழுவதிற்கும் அனுப்பி வைத்திருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
2014-15 நிதியாண்டில் 65,700 யூனிட்டுகளை இந்த நிறுவனம் ரயில்கள் வாயிலாக அனுப்பி வைத்த நிலையில் தற்போது லட்சக் கணக்கில் வாகனங்களை அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக 2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் அந்நிறுவனம் 4 லட்சத்து 47 ஆயிரத்து 750 யூனிட்டுகள் வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.
20க்கும் மேற்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து 450க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு கார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நாட்டிலேயே முதல் நிறுவனமாக தொழிற்சாலைக்கு உள்ளேயே ரயில்களை வரவைத்து வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே இதுவரை நிறுவனம் 2 மில்லியன் வாகனங்களை ரயில்கள் வாயிலாக அனுப்பி வைத்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவலை மாருதி சுஸுகி வெளியிட்டு இருக்கின்றது.
மேலும், ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்ற காரணத்தினால் நிறுவனம் மிகப் பெரிய அளவில் எரிபொருளை சிக்கனப்படுத்தி இருக்கின்றது. எண்களில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 270 மில்லியன் லிட்டர் எரிபொருளை அது மிச்சப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, எரிபொருளை மிச்சப்படுத்தி இருக்கின்ற காரணத்தினால் நிறுவனத்தால் காற்று மாசு ஏற்படுவதும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கார்பன் மாசு உமிழ்வு தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் ரயில் வாயிலாக வாகனங்களை அனுப்பி வைப்பதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டு இருக்கின்றது. அதாவது, 2 மில்லியனில் இருந்து 4 மில்லியனாக அதை உயர்த்தவே அது முயற்சித்து வருகின்றது.
இந்த இலக்கை 2030-31 ஆம் நிதியாண்டிற்குள்ளேயே எட்ட அது திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், இந்த இலக்கை எட்டும் நோக்கிலேயே நிறுவனம் சமீபத்தில் இன்-பிளான் ரயில்வே சைடிங்கை உருவாக்கியது. குஜராத் ஆலையிலேயே இந்த வசதியை அது ஏற்படுத்தி இருக்கின்றது. இதை பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைத்தார். இந்த வசதியின் வாயிலாக ஆண்டிற்கு 3 லட்சம் வாகனங்கள் வரை மாருதி சுஸுகியால் அனுப்பி வைக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காற்று மாசு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் காற்று மாசைக் குறைக்கும் பொருட்டு ரயில்களைப் பயன்படுத்தி அது கார்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கி இருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனத்திற்கும் லாபம், காற்று மாசும் மிகப் பெரிய அளவில் குறைந்துக் காணப்படுகின்றது.
இதுமட்டுமில்லைங்க, வாகனங்களும் மிகவும் பாதுகாப்பாக விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கார்களை பத்திரமாக எடுத்துச் செல்வதற்கான செட்-அப்பையே ரயில்வே நிறுவனம் கார்களை ஏற்றிச் செல்லும் போகிக்களை ரெடி செய்திருக்கின்றது. இதுவே சிறு கீரல்கள்கூட இல்லாமல் கார்கள் பயணிக்க உதவியாக இருக்கின்றன. இதுவும், ரயிலை அதிகளவில் மாருதி சுஸுகி பயன்படுத்த ஓர் காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications








