நிறைய பேர் ஐடியா கொடுப்பாங்க... இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!! இன்ஸ்சூரன்ஸில் சல்லி பைசா வாங்க முடியாது!
மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று. அளவில் சிறியதாக, விலை குறைவானதாக உள்ளதால் மிடில்-கிளாஸ் மக்கள் பலரது முதன்மையான சாய்ஸாக ஆல்டோ விளங்குகிறது. குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காகவே, ஆல்டோவில் சில அம்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. அத்தகைய அம்சங்களுள் ஒன்று, காரை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பொத்தான் ஆகும். ஆனால், இங்கு ஒரு ஆல்டோ காரில் புஷ் ஸ்டார்ட் பொத்தான் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆல்டோ கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு பலத்த கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், ஒருபக்கம் கார்களை மாடிஃபிகேஷன் செய்வது தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில கார்களை மாடிஃபிகேஷன் செய்வது மிகவும் கடினமாக இருந்தாலும், அத்தகைய கார்களிலும் சில பல மாற்றங்களை செய்கின்றனர்.

அந்த வகையில், இங்கு ஒரு ஆல்டோ காரில் புஷ் ஸ்டார்ட் பொத்தானை சேர்த்துள்ளனர். மேலும், இந்த காரை கண்ட்ரோல் செய்வதற்காக இரு டிஜிட்டல் சாவிகள் உள்ளன. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முதல் காட்சியில், இரு டிஜிட்டல் சாவிகள் மற்றும் காருக்குள் ஸ்டேரிங் சக்கரத்துக்கு கீழ் வழங்கப்பட்டுள்ள பொத்தானை காட்டியுள்ளனர்.
2வது காட்சியில், பொத்தானை பொருத்துவதற்காக ஸ்டேரிங் சக்கரத்துக்கு கீழ் இருக்கும் பேனல்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு உள்ளதை காணலாம். மாடர்ன் கார்களில் வழங்கப்படும் புஷ் ஸ்டார்ட் பொத்தானின் சிறப்பு என்னவென்றால், கார்களில் சாவியை நுழைக்க தேவையிருக்காது. ஒரு பொத்தானை அழுத்தினாலே என்ஜின் உடன் கார் முழுவதுமாக ஸ்டார்ட் ஆகிவிடும்.

இதற்காக, காரின் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் பாகங்களும் அந்த ஒரு பொத்தான் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், இந்த ஆல்டோ காரில் எலக்ட்ரானிக் பாகங்கள் யாவும் புஷ் ஸ்டார்ட் பொத்தான் மற்றும் டிஜிட்டல் சாவி உடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆல்டோ காரில் சாவியை நுழைக்கும் அதே இடத்தில் இந்த பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொத்தானை அழுத்தியவுடன் கார் எவ்வாறு ஸ்டார்ட் ஆகிவிடுகிறது என்பதை வீடியோவில் காட்டியுள்ளனர்.
இந்த பொத்தானை யார் வேண்டுமானாலும் அழுத்தி காரை ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், அதற்கு டிஜிட்டல் சாவி ஆனது காரில் இருந்து 3 மீட்டருக்குள் இருக்க வேண்டும். டிஜிட்டல் சாவியை காரில் இருந்து 3 மீட்டருக்கு மேல் கொண்டு சென்றுவிட்டால், கார் தானாக ஆஃப் ஆகிவிடும். வீடியோவில், இந்த சிஸ்டம் ஒழுங்காக இயங்குவது போன்று தெரியலாம். ஆனால், இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்கள் காரில் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி தீப்பொறிகளுக்கு வழிவகுக்கலாம்.
இயங்கிக் கொண்டிருக்கும்போது நடுரோட்டில் கார்கள் தீப்பற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இவ்வாறான மாடிஃபிகேஷன்கள் தான் காரணம் ஆகும். ஏனெனில், நாமாக வாங்கி பொருத்தும் புஷ் ஸ்டார்ட் பொத்தான் சிஸ்டம் ஆனது எந்த அளவிற்கு தரமானது என்பது நமக்கு தெரியாது. பெரும்பாலும் அது தரம் குறைந்தவையாகவே இருக்கும். அதனால்தான், அவை வெளியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதுமட்டுமின்றி, அந்த சிஸ்டம் காரின் மற்ற எலக்ட்ரிக் பாகங்கள் உடன் இணைந்து எந்த அளவிற்கு சரியாக செயல்படும் என்பதையும் கூற இயலாது. ஆனால் அதுவே, கார் நிறுவனங்கள் தொழிற்சாலையில் வைத்து காரை பல்வேறு விதமான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு காரையும் கார் நிறுவனங்கள் பல மணிநேர உழைப்பை போட்டு பார்த்து, பார்த்து உருவாக்குவதால் இவ்வாறு நீங்களாக எதையும் மாற்ற வேண்டும். இத்தகைய செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது மட்டுமின்றி, காரின் இன்ஸ்சூரன்ஸையும் பாதிக்கும். ஆதலால், இவ்வாறான ஆஃப்டர்-மார்க்கெட் புஷ்-ஸ்டார்ட் பொத்தானை காரில் பொருத்த நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம்.


Click it and Unblock the Notifications








