ஸ்விஃப்டோ-வேகன்ஆரோ இல்ல.. இதுவர நாட்டிலேயே இந்த ஒரு கார் மாடல் மட்டும்தான் 5மில்லியன் யூனிட் வர சேலாகியிருக்கு
இந்தியாவிலேயே இதுவரை அதிகம் விற்பனையான கார் மாடல் எது என கேட்டால் நம்மில் பலர் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), வேகன்ஆர் (WagonR) அல்லது ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) இவற்றையேதான் கூறுவோம். இவைதான் இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் கார் மாடல் என்றே நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், இதில் எந்த கார் மாடலும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் அல்ல என்பதுதான் உண்மை. அப்போ, மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) மாடலா என்றும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுவும் இல்லை. அப்ப வேறு எந்த கார் மாடல்தான் இந்தியாவின் அதிகமான விற்பனையான கார் மாடல் என்று தானே கேக்குறீங்க, மாருதி சுஸுகியின் மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பான ஆல்டோ (Alto)தான் அது.

ஆமாங்க இந்த குட்டியான தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் (Hatchback) கார் மாடலுக்கு இந்தியாவில் செம்ம சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனையாகிய அளவிற்கு நாட்டில் வேறு எந்த கார் மாடலும் அதிகளவில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுவரை 5 மில்லியன்களுக்கும் அதிகமான யூனிட்டுகள் வரை இந்த கார் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. இந்த கார் மாடல் முதல் முதலில் 2000 மாவது ஆண்டிலேயே நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையிலேயே அது 5.06 மில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமாக ஆல்டோ விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2000-2022 வரை இதற்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பு நிலவியது என்பது குறிப்பிடத்தகுந்து. குறிப்பாக, முதல் 17 ஆண்டுகளுக்கு மிக அற்புதமான விற்பனை வரவேற்பை இந்த கார் நாட்டில் பெற்றது. ஆல்டோவிற்கு அடுத்த இடத்தில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஹூண்டாய் ஐ10 இருக்கின்றது.
இது இதுவரை 3.3 மில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமாக ஐ10 விற்பனையாகி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி ஆல்டோ கே10-தான் விற்பனையில் உள்ளது. மற்றவை விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன. ரூ. 3.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 5.96 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல், மற்றும் சிஎன்ஜி என்சின் தேர்வுகள் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகும். மேலும், அதிக மைலேஜையும் வழங்கும்.
இதன் பெட்ரோல் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 24.39 கிமீ முதல் 24.90 கிமீ வரையிலும், சிஎன்ஜி ஆப்ஷன் 33.85 கிமீ வரையிலும் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான அதிக சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஆல்டோவிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் ஐ10 தற்போது கிராண்ட் ஐ10 நியாஸ் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையும் வீழ்த்த இன்னும் எந்த கார் மாடலும் வரவில்லை. விரைவில் ஹூண்டாய் கிரெட்டா, டாடா பஞ்ச் மற்றும் மாருதி வேகன்ஆர் ஆகிய கார் மாடல்கள் ஆல்டோ மற்றும் ஐ10 ஆகிய கார் மாடல்களின் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் இப்போதைய பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக டாடா பஞ்ச் உருமாறி இருக்கின்று. கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இதுவே அதிகம் விற்பனையான கார் மாடல்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. எனவே சீக்கிரமே இந்த கார் விற்பனையில் மற்ற கார் மாடல்கள் செய்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








