மாருதி அரேனா ஷோரூம்-க்கு வயசு ஏழாம்.. இதுக்குள்ள எவ்ளோ கார்கள இதன் வாயிலாக விற்பனை செஞ்சிருக்காங்க தெரியுமா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியாவில் நெக்ஸா (Nexa) மற்றும் அரேனா (Arena) ஆகிய ஷோரூம்கள் வாயிலாக தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் அரேனா ஷோரூமையே மாருதி சுஸுகி இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகள் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்கள் பல இந்த ஷோரூம் வாயிலாகவே விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக வேகன்ஆர் (WagonR), ஸ்விஃப்ட் (Swift), பிரெஸ்ஸா (Brezza) மற்றும் எர்டிகா (Ertiga) ஆகியவை விற்கப்படுகின்றன.

நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வரை அரேனா, நெக்ஸா என எந்த பிரிவையும் அது அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே 2015 ஆம் ஆண்டில் நெக்ஸாவை அறிமுகப்படுத்தியது. இதனை பிரீமியம் தர கார் மாடல்களுக்கு என்றே அது பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியது.

Maruti arena celebrates 7 years

இதைத்தொடர்ந்தே, வழக்கமான கார் மாடல்களுக்காக அது அரேனா புதிய ஷோரூமை அறிமுகப்படுத்தியது. இந்த பிரிவு தொடங்கப்பட்டு ஏழாண்டுகள் ஆகிவிட்டன. இதற்குள்ளாக இந்த ஷோரூம் வாயிலாக 11 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வாகனங்களை அது விற்பனைச் செய்துவிட்டது. இத்தகைய அமோக வரவேற்பையே இந்தியாவில் மாருதி சுஸுகி-யின் அரேனா ஷோரூமில் உள்ள தயாரிப்புகள் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், மக்களை இந்த அளவிற்கு வளைத்துப்போடுவதற்காக மிகப் பெரிய நெட்வொர்க்கை அரேனா-வின்கீழ் மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது. 3,069 அரேனா விற்பனையகங்களை அது உருவாக்கி இருக்கின்றது. மேலும், இந்தியாவின் 2,596க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனையகங்களை அமைத்திருக்கின்றது. இத்தகைய பிரமாண்ட விற்பனை சங்கிலியையே அரேனாவிற்காக மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது.

அரேனா ஷோரூம் வாயிலாக மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர், செலிரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், ஆல்டோ கே10, ஈகோ, எர்டிகோ, பிரெஸ்ஸா மற்றும் டிசையர் ஆகிய கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், மிக மிக விலை குறைவான கார் மாடலாக ஆல்டோ கே10 இருக்கின்றது.

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 3.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடலின் விலையையே இப்போது மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது. ஆல்டோ கே10 விஎக்ஸ் வேரியண்ட் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 6,500 வரை குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் விலை மட்டுமல்ல அரேனா ஷோரூமில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு கார் மாடலான எஸ்-பிரெஸ்ஸோ-வின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாடலின் எல்எக்ஸ்ஐ வேரியண்டின் விலையே குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 2 ஆயிரமை குறைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு குட்டி கார்களுக்கும் கிடைக்கும் வரவேற்புக் கணிசமாகக் குறைந்துக் காணப்படுகின்றது.

இதன் விளைவாகவே விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு நிறுவனம் மாருதி சுஸுகி தற்போது எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 ஆகிய கார் மாடல்களின் விலையைக் குறைத்து இருக்கின்றது. ஆகையால், மாருதி சுஸுகியின் இந்த கார்களுக்கு வரும் நாட்களில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் சில தினங்களில் விநாயகர் சதுர்த்தியும், இதைத்தொடர்ந்து, விஜயதசமி மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை நாட்கள் வர இருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தில் இந்தியர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கிலும் இரு கார்களின் விலையை மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே அதன் ஷோரூம்களும், கார் விற்பனை எண்ணிக்கையும் உள்ளன. நிறுவனத்தின் ஷோரூம்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பரந்துவிருந்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 5:00 [IST]
English summary
Maruti suzuki arena celebrates 7 years a comparative look with nexa showrooms
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+