பைக் வாங்கறதுக்கு பதிலா இனி எல்லாரும் இந்த 2 மாருதி கார்களைதான் வாங்குவாங்க பாருங்க... இவ்ளோ மைலேஜ் தருமா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த 2 கார்களின், நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19,630 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் 13,643 மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 33,273 ஆகும். இது உண்மையிலேயே மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கை என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. சரியான விலை மற்றும் மைலேஜ் ஆகிய 2 முக்கிய காரணங்களால்தான், இந்த 2 கார்களும் விற்பனையில் சாதித்து கொண்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.66 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.88 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி ஃப்ரான்ஸ் காரின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுவதால், இந்த 2 கார்களும் விற்பனையில் சாதனை படைத்து கொண்டுள்ளன. வரும் காலங்களில் இந்த 2 கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இதற்கான காரணத்தையும் இந்த செய்தியிலேயே நாங்கள் தெரிவித்து விடுகிறோம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் புதிய தலைமுறை மாடலையும், ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய மாடல்களில் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும்பட்சத்தில், 2 கார்களின் விற்பனையும் அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான விலை, சிறப்பான மைலேஜ் மற்றும் அட்டகாசமான வசதிகள் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களும் விற்பனையில் தூள் கிளப்பி கொண்டுள்ளன. கூடுதலாக இந்த 2 கார்களின் டிசைனும் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


Click it and Unblock the Notifications








