டூவீலர் மாரி மைலேஜ் குடுக்கற கார் விலை உண்மையா இவ்ளோதானா! வேலைய அப்படியே விட்டுட்டு ஷோரூம் கௌம்ப வேண்டியதுதான்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான (ஜனவரி-ஜூன்), சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 94,521 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 1,00,107 ஆக இருந்தது.
இது 6 சதவீத வீழ்ச்சி ஆகும். 6 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ 3வது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் (Variants), 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மறுபக்கம் மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும், இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, இதன் பவர் அவுட்புட் 77.50 பிஎஸ் மற்றும் 98.50 என்எம்-ஆக மட்டுமே இருக்கும். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

பவர் அவுட்புட் குறைவு, ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது என்றாலும் கூட, சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜை (Mileage) வாரி வழங்க கூடியதாக உள்ளது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.94 மைலேஜையும் மட்டுமே வழங்க கூடியவையாக உள்ளன. எனினும் இவையும் சிறப்பான மைலேஜ்தான் என்பதில் நமக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், 6.66 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மாருதி சுஸுகி பலேனோ கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.83 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பண்டிகை காலம் இருப்பதால், 2024ம் ஆண்டின் 2வது அரையாண்டில், மாருதி சுஸுகி பலேனோ கார் எழுச்சி பாதைக்கு திரும்பலாம் என கருதப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








