31 கிமீ மைலேஜ் தர்ற காரை இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்களா! இப்பவே ஷோரூமுக்கு கௌம்பீர வேண்டியதுதான்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ள மாருதி சுஸுகி பலேனோ காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 12,485 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,516 ஆக இருந்தது. இது 33 சதவீத வீழ்ச்சி ஆகும்.

விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, இந்தியாவில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோவிற்கு இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ, 8வது இடத்தில் உள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ கார், பல்வேறு வசதிகள் (Features) நிரம்பியதாகும். இந்த காரின் வசதிகள் பட்டியலில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தவறாமல் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கீலெஸ் எண்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க கூடிய பல்வேறு வசதிகளையும் மாருதி சுஸுகி பலேனோ கார் கொண்டுள்ளது. சரி, பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பற்றி நீங்கள் நினைப்பது புரிகிறது.
மாருதி சுஸுகி பலேனோ காரில், 6 ஏர்பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக மைலேஜ் (Mileage) விஷயத்திலும், மாருதி சுஸுகி பலேனோ சிறந்து விளங்குகிறது.
இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் - மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், 1.2 லிட்டர் பெட்ரோல் - ஏஎம்டி கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இன்னும் அதிகமான மைலேஜ் கிடைக்க வேண்டும் என விரும்பினால், மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் இந்த காரின் 1.2 லிட்டர் சிஎன்ஜி - மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு மாற்றாக ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.66 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.83 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








