இந்த விலைக்கு 31 கிமீ மைலேஜ் தரும் கார் கிடைக்குதா! ஷோரூமுக்கு போயி கையோட ஒன்னு வாங்கீட்டு வந்தரணும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி பலேனோ காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் 14,895 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 6 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்த வளர்ச்சியின் மூலம், நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 7.81 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி பலேனோ காரின் பெட்ரோல் வெர்ஷன்களில் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், மேனுவல் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜையும், ஏஎம்டி வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, இதன் பவர் அவுட்புட் சற்று குறைவு. அதாவது 77.5 பிஎஸ் பவர் மற்றும் 98.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வழங்கும்.
எனினும் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது. பலேனோ காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் எண்ட்ரி, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் என இந்த காரில் ஏகப்பட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








