வாங்க ஆள் இல்ல! 31 கிமீ மைலேஜ் தரும் காருக்கே இப்படி ஒரு நிலைமையா! தலையில் துண்டை போட்ட மாருதி சுஸுகி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான மாருதி சுஸுகி பலேனோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 12,842 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 18,733 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 31 சதவீத வீழ்ச்சியை மாருதி சுஸுகி பலேனோ பதிவு செய்துள்ளது.

Maruti Suzuki Baleno

வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகியவை இருக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 8.45 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Maruti Suzuki Baleno Interior Design

மாருதி சுஸுகி பலேனோ காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிமீ மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.94 கிமீ மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த ஆப்ஷனாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ கார் அடைந்துள்ள சரிவு மிகப்பெரியது. எனினும் வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து மாருதி சுஸுகி பலேனோ மீண்டு வரும் என நாம் நம்பலாம். ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவது, மாருதி சுஸுகி பலேனோ காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அல்ட்ராஸ் காரில் ரேசர் என்ற புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இந்த டாடா அல்ட்ராஸ் காரில், எலெக்ட்ரிக் வெர்ஷனும் கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 23:35 [IST]
English summary
Maruti suzuki baleno sales report may 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+