இவ்ளோ கம்மியான விலையில் 31 கிமீ மைலேஜ் தரும் காரா! ஷோரூமை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மாதிரி மாத்தீட்டாங்க!

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார் எது என்று கேட்டால், பச்சை குழந்தை கூட, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) என சொல்லும். அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக மாருதி சுஸுகி பலேனோ உள்ளது. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 16,293 பலேனோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 12,961 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனையில் 26 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Maruti Suzuki Baleno Side Design

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் புதிய தலைமுறை (New Generation) மாடல் வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்த காரில், புத்தம் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் (Strong Hybrid Engine) ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே மாருதி சுஸுகி பலேனோ காரின் புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், இதன் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை வெறும் 6.66 லட்ச ரூபாய் மட்டுமே.

Maruti Suzuki Baleno

இது சிக்மா வேரியண்ட்டின் விலை ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.83 லட்ச ரூபாயாக உள்ளது. இது ஆல்ஃபா ஏஜிஎஸ் வேரியண்ட்டின் விலை ஆகும். இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இருப்பதிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் (Features), மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்படுகின்றன.

மேலும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி பலேனோ கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள வசதிகள், வேரியண்ட்களை பொறுத்து மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்களுக்கு மாற்றாக ஒரு காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால், மாருதி சுஸுகி பலேனோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2024, 22:08 [IST]
English summary
Maruti suzuki baleno sales report november 2024 26 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+