அடிமாட்டு விலையில விற்கப்படும் 31 கிமீ மைலேஜ் கார்! ஷோரூமை அண்ணாச்சி கடையா மாத்தீட்டாங்க! ஊரே அங்கதான் இருக்கு
இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) கார்தான். இதனால் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய போட்டி மாடல்கள் எதுவும், விற்பனை எண்ணிக்கையில், மாருதி சுஸுகி பலேனோவிற்கு அருகில் கூட வர முடியாது என்ற சூழல் காணப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆதிக்கம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் தொடர்ந்துள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ காரின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 16,082 பலேனோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் அதற்கு முந்தைய மாதத்தில், அதாவது நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை வெறும் 14,292 ஆக மட்டுமே இருந்தது. இது 11.13 சதவீத வளர்ச்சி ஆகும். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை காலமாக இருந்தது.
ஒரு வகையில் இந்த பண்டிகை காலமும், மாருதி சுஸுகி பலேனோ காரின் வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ கார் வெறும் 6.66 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 9.83 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி பலேனோ காரை, வாடிக்கையாளர்கள் பலரும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே இதற்கு சாட்சி.
சரியான விலை நிர்ணயம் தவிர, மைலேஜூம் இந்த காரின் பிரபலத்திற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) வெர்ஷன்களில் கிடைக்கிறது. இந்த 2 வெர்ஷன்களிலும், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 2 இன்ஜின்களுக்கும் இடையே 3 முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. அவை கியர் பாக்ஸ் (Gear Box), பவர் அவுட்புட் (Power Output) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவை ஆகும். அதாவது பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக பவர் அவுட்புட். பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த காரின் பவர் அவுட்புட் 90 பிஎஸ் பவர் / 113 என்எம் டார்க் ஆக இருக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் 77.50 பிஎஸ் / 98.50 என்எம் ஆக மட்டுமே இருக்கும்.
அதேபோல் மைலேஜிலும் வித்தியாசம் உள்ளது. இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் மற்றும் பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் முறையே ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜையும், 22.94 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. இதுவே நல்ல மைலேஜ்தான். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் இதை விட அதிக மைலேஜ் வழங்குகிறது. அதாவது சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சரியான விலை நிர்ணயம், நல்ல மைலேஜ் ஆகியவற்றுடன், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கீ லெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளும் (Features) மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி பலேனோ காரை வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications








