31 கிமீ மைலேஜை வாரி வழங்க கூடிய காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! அப்ப தீபாவளிக்கு இதை வாங்கீர வேண்டியதுதான்!
இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Premium Hatchback Cars) என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) என இந்த செக்மெண்ட்டில் ஏகப்பட்ட கார்கள் இருந்தாலும் கூட, முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது என்னவோ மாருதி சுஸுகி பலேனோதான் (Maruti Suzuki Baleno). ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி பலேனோ கார், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் 14,292 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18,417 ஆக இருந்தது. அதாவது 4,125 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது பண்டிகை காலம் என்பதால், மாருதி சுஸுகி பலேனோ கார், உடனடியாகவே சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ கார், 6.66 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.83 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி பலேனோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 90 பிஎஸ் மற்றும் 113 என்எம். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில் மேனுவல் மாடலின் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர்கள் எனவும், ஏஎம்டி மாடலின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 77.50 பிஎஸ் மற்றும் 98.50 என்எம் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ கார், அதிக மைலேஜ் வழங்க கூடியதாக உள்ள அதே நேரத்தில், ஏராளமான அதிநவீன வசதிகளையும் கொண்டதாக இருக்கிறது.
9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய, அதே நேரத்தில் அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி பலேனோ காரை தேர்வு செய்யலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








