கடல மிட்டாய் கணக்கா மாருதி காரை வாங்கும் மக்கள்! விலை, மைலேஜ் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே ஷோரூமுக்கு போயிருவீங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 12,844 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 3வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 2 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள் உள்ளன. சரி, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விஷயத்திற்கு வருவோம். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்ததுடன் ஒப்பிடுகையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 11,200 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் மட்டும்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு சரியான விலை (Price), சிறப்பான மைலேஜ் (Mileage) மற்றும் அதிநவீன வசதிகள் (Features) ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை வெறும் 8.29 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.14 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மறுபக்கம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 17.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சிறப்பம்சங்களுடன், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி வியூ கேமரா, ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட் போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்த கார் விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) உள்ளிட்ட கார்களுக்கு, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








