சில பைக்குகள் கூட இவ்ளோ மைலேஜ் தராது! அதான் இந்த காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்கறாங்க! விலையும் இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 14,186 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 13,398 ஆக மட்டுமே இருந்தது.
இது 6 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை 8.34 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 17.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடனும் கிடைக்கிறது. இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில், சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. இதுதவிர ஏராளமான அதிநவீன வசதிகளும் வாரி வழங்கப்படுவதும் கூட, வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் மிகவும் புகழ்பெற்று விளங்குவதற்கு ஒரு காரணமாக உள்ளது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், சன்ரூஃப், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் இந்த காரில் வழங்கப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








