மாருதி கார்களை மக்கள் அதிகம் நம்புவதற்கு காரணம் என்னவா இருக்கும்? மார்ச்சில் சேல்ஸ் டாப் கியரில் போய் இருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி & விற்பனை நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாதந்தோறும் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்துவரும் மாருதி சுஸுகி கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி அதன் விலை குறைவான மற்றும் நம்பகமான கார்கள் மூலமாக இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்குகிறது. கடந்த 2024 மார்ச் மாதத்திலும் சுமார் 1 லட்சத்து 54,718 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை காட்டிலும் 15.03% அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் 1 லட்சத்து 32,763 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், வெறும் 29 நாட்களை கொண்ட கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 60,272 மாருதி சுஸுகி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 17 மாடல்களில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக முதலிடத்தில் வேகன்ஆர் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 16,368 ஆகும். ஆனால் உண்மையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதனை காட்டிலும் 937 கார்கள் அதிகமாக 17,305 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2024 பிப்ரவரி மாதத்தில் இன்னும் அதிகமாக 19,412 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 2வது இடத்தில் டிசைர் உள்ளது. மொத்தம் 15,894 டிசைர் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் வெறும் 13,394 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் சுமார் 2,500 டிசைர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் ரக கார் மாருதி சுஸுகி டிசைர் ஆகும். ஸ்விஃப்ட் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. டிசைர் செடான் மாடலின் ஹேட்ச்பேக் வெர்சன் தான் ஸ்விஃப்ட் ஆகும். அதாவது, தோற்றத்தில் இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை ஆகும். கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 15,728 ஆகும்.

ஆனால், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக ஸ்விஃப்ட் 15,728 கார்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த 2024 மார்ச்சில் ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து அதிகமாக மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 15,588 ஆகும்.
2023 மார்ச்சில் 16,168 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவற்றிற்கு அடுத்து, எர்டிகா கார்களை கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 14,888 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 மார்ச்சில் வெறும் 9,028 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் நாம் பார்த்துள்ள 5 மாருதி சுஸுகி கார்கள் இந்தியாவின் டாப்-10 இடத்திற்குள் எப்போதும் இடம்பிடிக்க கூடியவை. இன்னும் பிரெஸ்ஸா, புதிய ஃப்ரான்க்ஸ் உள்ளிட்ட பிரபலமான மற்ற மாருதி கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளை பார்க்கவில்லை. அவை, இதற்கு அடுத்தடுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications









