மாருதி வேகன்ஆர் காருக்கு மார்க்கெட் போகவே போகாது!! விண்ணை தொடும் சேல்ஸ் நம்பர்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிறுவனம் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் எத்தனை கார்களை விறபனை செய்துள்ளது? கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்கள் எவை என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மாருதி சுஸுகி இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த நிறுவனத்தின் பல கார்கள் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவைகளாக இருப்பதாகும். இதற்கேற்ப, நாடு முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்குகளையும் மாருதி சுஸுகி பரவலாக வைத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டாப்-10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் நிச்சயமாக 6இல் இருந்து 7 மாருதி சுஸுகி கார்கள் இருக்கும்.

maruti suzuki car sales report

இன்னும் சொல்லப்போனால், முதல் 3 இடங்களை மாருதி சுஸுகி கார்களே தன்வசப்படுத்துவது வழக்கம். ஆனால், கடந்த 2 மாதங்களாக (2024 மார்ச் & ஏப்ரல்) இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக முதலிடத்தை டாடா மோட்டார்ஸின் பஞ்ச் பிடித்துள்ளது. மாருதி சுஸுகியில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை வேகன்ஆர் பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 17,850 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் சுமார் 20,879 வேகன்ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில், வேகன்ஆர் கார்களின் விற்பனை ஆனது 14.51%, அதாவது 3,029 யூனிட்கள் குறைந்துள்ளது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் இன்னும் குறைவாக 16,368 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki car sales report

வேகன்ஆருக்கு அடுத்து, அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக 2வது இடத்தில் பிரெஸ்ஸா உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 17,113 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மாதத்திற்கு மாதம் பிரெஸ்ஸா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஏனெனில், 2023 ஏப்ரலில் 11,836 பிரெஸ்ஸா கார்களும், 2024 மார்ச்சில் 14,614 கார்களும் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில், மாருதி சுஸுகி டிசைர் உள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகும் ஒரேயொரு செடான் ரக காரான டிசைர் கடந்த மாதத்தில் மொத்தம் 15,825 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

maruti suzuki car sales report

4வது மற்றும் 5வது இடங்களில் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் ரக கார்களான ஃப்ரான்க்ஸ் மற்றும் பலேனோ உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 14,286 மற்றும் 14,049 ஆகும். 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள எர்டிகா மற்றும் ஈக்கோ கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13,544 மற்றும் 12,060 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் ஆல்டோ (9,043), கிராண்ட் விட்டாரா (7,651) மற்றும் ஸ்விஃப்ட் (4,094) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி எக்ஸ்.எல்6, செலேரியோ என மேலும் 7 கார் மாடல்களையும் மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. இந்த டாப்-10 லிஸ்ட்டில், கடைசி 10வது இடத்தில் உள்ள ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் வெகுவாக அதிகரிக்கும். ஏனெனில், மேம்படுத்தப்பட்ட நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 5:00 [IST]
English summary
Maruti suzuki car sales report of 2024 april check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X