தெருவுக்கு ஒரு மாருதி கார் இருக்கு... மாருதி சுஸுகியை யாராலும் கட்டுப்படுத்த முடியல!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்களை அசால்ட்டாக விற்பனை செய்துவரும் கார் நிறுவனம். நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் 1.43 லட்ச கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி அசத்தி உள்ளது. ஆனால், இது வழக்கத்தை காட்டிலும் குறைவு என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், மாருதி சுஸுகியின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை எந்த அளவிற்கு உள்ளது என்பதையும், வெளிநாட்டு ஏற்றுமதிகள் குறித்த விபரங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியில் இருந்து கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 81,782 வாகனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 89,082 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, 2023 ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 7,300 வாகனங்களை மாருதி சுஸுகி குறைவாக விற்பனை செய்துள்ளது.

maruti suzuki cars sales report

இந்த 1 லட்சத்து 81,782 மாருதி சுஸுகி வாகனங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளும் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகியில் இருந்து உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45,570 ஆகும். ஆனால், 2023 ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 58,678 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 26,003 ஆகும். 2023 ஆகஸ்ட்டில் 24,614 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 10,209 மாருதி சுஸுகி வாகனங்கள் வேறு கார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

maruti suzuki cars sales report

கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையான 1 லட்சத்து 43,075-இல் மினி மற்றும் காம்பெக்ட் கார்களின் எண்ணிக்கை மட்டும் 68,699 ஆகும். இந்த மினி & காம்பெக்ட் கார்களில் மாருதி சுஸுகியின் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, பலேனோ, செலேரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில், ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டும் 10,648 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட மற்ற கார்கள் அனைத்தும் 58,051 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 68,699 மினி + காம்பெக்ட் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் இந்த கார்களை 84,660 யூனிட்கள் மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. மாருதி சுஸுகியின் மிட்-சைஸ் செடான் காரான சியாஸ் 707 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

maruti suzuki cars sales report

2023 ஆகஸ்ட் மாதத்தில் 849 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதி சுஸுகியின் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களான பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் எக்ஸ்.எல்6 கார்கள் கடந்த மாதத்தில் 62,684 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஆகஸ்ட் மாதத்தில் இந்த கார்கள் மொத்தமாக 58,746 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மாருதி சுஸுகியின் ஒரேயொரு வேன் மாடலான ஈக்கோ கடந்த மாதத்தில் 10,985 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் அதிகமாக 11,859 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதி சுஸுகியின் ஒரேயொரு கமர்ஷியல் வாகனமான சூப்பர் கேரி கடந்த மாதத்தில் 2,495 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்ட்டில் 2,564 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி வாகனங்களின் விற்பனை இந்தியாவில் எப்போதும் சிறப்பாகவே இருந்து வருகிறது. சில மாதங்களில் சில மாருதி சுஸுகி வாகனங்களின் விற்பனை குறைந்தாலும், அடுத்த மாதத்திலேயே முன்னேற்றம் கண்டுவிடும். அந்த வகையில், மாருதி சுஸுகியின் எஸ்யூவி கார்கள் விற்பனை சமீப மாதங்களாக சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 10:02 [IST]
English summary
Maruti suzuki cars sales report 2024 august check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X