இந்த ரிப்போர்டுக்காக தானே காத்துக்கிட்டு இருந்தோம்... மாருதி காரை வாங்க எப்படி இத்தனை பேர் வராங்கனு தெரியல!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இதனை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், நடந்து முடிந்த 2024 நவம்பர் மாதத்திலும் நம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் அதிகப்படியான கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அது எவ்வளவு என்பதை பற்றியும், வழக்கத்தை காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
மாருதி சுஸுகியின் அடையாளமே அதன் பட்ஜெட் விலையிலான கார்களாகும். அதாவது, மிடில்-கிளாஸ் மக்களை டார்க்கெட் செய்து கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாக கிராண்ட் விட்டாரா, எக்ஸ்.எல்6 போன்ற சற்று விலையுயர்ந்த கார்களிலும் மாருதி சுஸுகி ஆர்வம் காட்டி வருகிறது.

மாருதி சுஸுகியின் அளவில் சிறியதான மினி கார்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோவை பொறுத்தவரையில், கடந்த நவம்பர் மாதத்தில் 9 ஆயிரத்து 750 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 நவம்பர் மாதத்தில் 209 கார்கள் அதிகமாக 9 ஆயிரத்து 959 கார்களை விற்பனை செய்து இருந்தது. எஸ்-பிரெஸ்ஸோவை காட்டிலும் ஆல்டோ கார்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மினி கார்களை காட்டிலும் கொஞ்சம் அளவில் பெரியதான காம்பெக்ட் கார்களாக பலேனோ, செலேரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்ஆர் உள்ளிட்டவற்றை மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. இவை மொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 61 ஆயிரத்து 373 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 நவம்பரில் இவை 64 ஆயிரத்து 679 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மாருதி சுஸுகியின் மிட்-சைஸ் செடான் காரான சியாஸ் கடந்த மாதத்தில் 597 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் 278 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதி சுஸுகியின் விற்பனையில் மிக முக்கிய பங்காற்றிவரும் எஸ்யூவி/ எம்பிவி கார்களாக பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்டவை உள்ளன.
இவை மொத்தமாக கடந்த மாதத்தில் 59 ஆயிரத்து 3 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 நவம்பரில் இவற்றின் விற்பனை எண்ணிக்கை ஏறக்குறைய 10 ஆயிரம் குறைவாக 49 ஆயிரத்து 16 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் இருந்து எஸ்யூவி, எம்பிவி கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறியலாம்.

மாருதி சுஸுகியின் ஒரேயொரு வேன் மாடலான ஈக்கோ கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 589 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 226 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 312 பயணிகள் வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. 2023 நவம்பர் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் 7 ஆயிரத்து 154 பயணிகள் வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 591 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனை செய்த பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இது இல்லாமல், கடந்த நவம்பர் மாதத்தில் வெளிநாட்டிற்கு 28 ஆயிரத்து 633 கார்களை இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விற்பனை எண்ணிக்கைகளை பார்க்கும்போது, மாதத்திற்கு மாதம் மெல்ல, மெல்ல மாருதி சுஸுகி வளர்ச்சி கண்டு வருவதை அறிய முடிகிறது. குறிப்பாக, மாருதி சுஸுகியின் எஸ்யூவி, எம்பிவி கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, அந்த பிரிவில் புது, புது கார் மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









