34கிமீ மைலேஜ் தரும் காரின் அறிமுகத்துக்கு முன்னாடியே இப்படியா? மாருதி சுஸுகியை அண்ணாந்து பார்க்க வேண்டியதுதான்

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில்தான் இந்த நிறுவனம் அதன் பிரபலமான டிசைர் காரின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனை அறிமுகம் செய்தது. இருப்பினும், ஏற்கனவே மாருதி சுஸுகி கார்களின் விற்பனை உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, வழக்கம்போல் கடந்த அக்டோபர் மாதத்திலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள், மாருதி சுஸுகி கார்கள் வாரியாக வெளிவந்துள்ளன.

இந்தியாவில் ஒரு மாதத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய்க்கும் மாருதி சுஸுகிக்கும் இடையே சுமார் 1 லட்சம் கார்கள் வித்தியாசம் உள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் ஹூண்டாயை காட்டிலும் மாருதி சுஸுகி ஏறக்குறைய 1 லட்சம் கார்களை அதிகமாக விற்பனை செய்கிறது.

maruti suzuki cars sales report

நடந்து முடிந்த 2024 அக்டோபர் மாதத்திலும் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரத்து 591 கார்களை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது ஹூண்டாயை காட்டிலும் 1 லட்சம் கார்கள் அதிகம் என்றாலும், 2023 அக்டோபரில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 5% குறைவாகும். அதாவது, 8 ஆயிரத்து 456 கார்கள் குறைவாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 47 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. நடப்பு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9 மாருதி சுஸுகி கார்கள் 11 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில் 10 மாருதி சுஸுகி கார்கள் 11 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக, 2 கார்கள் 20 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்கப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales report

ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு மாருதி சுஸுகி கார் கூட 19 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படவில்லை. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார், எர்டிகா ஆகும். மாருதி சுஸுகியின் எம்பிவி காராகவும், இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காராகவும் விளங்கும் எர்டிகா கடந்த அக்டோபர் மாதத்தில் 18 ஆயிரத்து 785 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2023 அக்டோபரில் 14 ஆயிரத்து 209 எர்டிகா கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, எர்டிகா கார்கள் விற்பனை ஆனது 32% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து அதிகம் விற்கப்பட்ட மாருதி சுஸுகி காராக ஸ்விஃப்ட் உள்ளது. 2023 அக்டோபரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 17 ஆயிரத்து 539 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

இதற்கடுத்து 3வது இடத்தில் பிரெஸ்ஸா உள்ளது. பிரெஸ்ஸா கார்களின் விற்பனை எண்ணிக்கையில் பெரியதாக மாற்றமில்லை. 2023 அக்டோபரில் 16 ஆயிரத்து 50 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் 16 ஆயிரத்து 565 பிரெஸ்ஸா கார்கள் விற்கப்பட்டுள்ளன. பிரெஸ்ஸாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ள ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை சமீப காலமாக வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

maruti suzuki cars sales report

கடந்த மாதத்தில் 16 ஆயிரத்து 419 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்கப்பட்டுள்ளன. 5வது இடத்தில் பலேனோ உள்ளது. முதல்முறையாக விற்பனையில் பலேனோவை ஃபிரான்க்ஸ் முந்தியுள்ளது. இருப்பினும், பலேனோ கார்களின் விற்பனை வெறும் 3% மட்டுமே குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 16 ஆயிரத்து 82 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் 14 ஆயிரத்து 83 யூனிட்கள் விற்பனை உடன் கிராண்ட் விட்டாரா உள்ளது.

7வது இடத்தில் வேகன்ஆர் 13 ஆயிரத்து 922 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 அக்டோபரில் சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட டிசைர் இந்த வரிசையில் 12 ஆயிரத்து 698 யூனிட்கள் விற்பனை உடன் 8வது இடத்தில் உள்ளது. 9வது மற்றும் 10வது இடங்களில் ஈக்கோ மற்றும் ஆல்டோ கார்கள் முறையே 11,653 மற்றும் 8,548 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எர்டிகா, பிரெஸ்ஸா மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட கார்களின் விற்பனை அதிகரித்து இருப்பது மாருதி சுஸுகிக்கு மகிழ்ச்சியை தந்திருந்தாலும், ஒட்டுமொத்த கார்கள் விற்பனை குறைந்திருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கும். ஆல்டோ, செலேரியோ, எஸ்-பிரெஸ்ஸோ கார்களின் விற்பனை சரிவை இதற்கு காரணமாக சொல்லலாம். இருப்பினும், புதிய டிசைர் வரும் மாதங்களில் மாருதி சுஸுகிக்கு நம்பிக்கைக்குரிய காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 8:00 [IST]
English summary
Maruti suzuki cars wise sales report october 2024 check all details here
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X