பைக்குகளை விட அதிக மைலேஜ் குடுக்கும் காரின் விலை இவ்ளோதானா! தரமட்டத்துக்கு எறங்கி வந்தும் வாங்க ஆள் இல்ல...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இதன் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,586 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி செலிரியோ 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பதுதான்.

Maruti Suzuki Celerio

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 4,458 செலிரியோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,586 ஆக குறைந்துள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சி ஆகும். இத்தனைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ விலை குறைவான ஒரு கார்தான்.

சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய காராகவும் இது உள்ளது. இருப்பினும் மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப விலை 5.37 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது.

Maruti Suzuki Celerio Front View

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.09 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேரியண்ட்களை (Variants) பொறுத்து இதன் மைலேஜ் மாறுபடும்.

மாருதி சுஸுகி செலிரியோ காரின் LXI MT, VXI MT மற்றும் ZXI MT ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. மறுபக்கம் ZXI+ MT வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 24.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ZXI AGS மற்றும் ZXI+ AGS ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், VXI AGS வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இதில் MT என்பது மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Manual Transmission), அதாவது மேனுவல் கியர் பாக்ஸ் என்பதை குறிக்கிறது.

அதே நேரத்தில் AGS என்பது ஆட்டோ கியர் ஷிஃப்ட் (Auto Gear Shift) என்பதை குறிக்கிறது. இவை அனைத்துமே பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும். மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட VXI MT வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சில பைக்குகளை விட அதிக மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ காரின் இந்த சரிவிற்கான காரணம் என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷனை களமிறக்கினால், விற்பனை எண்ணிக்கையை மீட்டெடுக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2024, 23:55 [IST]
English summary
Maruti suzuki celerio registers 20 per cent degrowth in february 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+