35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு கார் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 3,478 செலிரியோ ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 4,646 ஆக இருந்தது. இது 25 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ கார் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கிறது. அத்துடன் இது மிகவும் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது. இருப்பினும் செலிரியோ காரின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கவலையை ஏற்படுத்த கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம்.

Maruti Suzuki Celerio

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.09 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி சுஸுகி செலிரியோ காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் (AGS) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஏஜிஎஸ் என்பது ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS - Auto Gear Shift) ஆகும்.

Maruti Suzuki Celerio Front View

மறுபக்கம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வெர்ஷனிலும் இதே 1.0 லிட்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கவில்லை. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது. செலிரியோ காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது! இந்த மைலேஜ், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில டூவீலர்களை காட்டிலும் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பம்சம் தவிர, மாருதி சுஸுகி செலிரியோ காரில், பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதில், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் வசதியுடன் கூடிய 17.78 செமீ ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ முக்கியமானது. அத்துடன் சுஸுகி கனெக்ட் மற்றும் இன்ஜின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி செலிரியோ காரானது, ஹார்டெக்ட் பிளாட்பார்ம் (Heartect Platform) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரையில், இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக மாருதி சுஸுகி செலிரியோ காரில்தான், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் (Hill Hold Assist) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை, வரும் மாதங்களில் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கலாம். ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் தரக்கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி செலிரியோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 23:52 [IST]
English summary
Maruti suzuki celerio registers degrowth of 25 per cent in march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+