35 கிமீ மைலேஜ் வழங்க கூடிய காரோட விலையை கேட்டதும் ஊரே ஆச்சரியப்படுது! இதுக்கு மேலயும் பைக் எல்லாம் வாங்கணுமா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 3,181 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4,038 ஆக இருந்தது. அதாவது 857 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 21.22 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.04 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Maruti Suzuki Celerio

இது இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களும் கூட, 24-26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவைதான். எனவே ஓரளவிற்கு விலை குறைவாகவும், அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் கிடைக்க கூடிய வகையிலும் திகழ கூடிய ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறப்பான ஆப்ஷனாக இருக்கும்.

Maruti Suzuki Celerio Interior

இது அளவில் சிறிய ஹேட்ச்பேக் ரக கார் என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கும் கூட மிகவும் ஏற்றதாக இருக்கும். ஓரளவிற்கு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரில், ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகள் எல்லாம், மாருதி சுஸுகி செலிரியோ காரில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில் (Safety Features), ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை எல்லாம் முக்கியமானவையாக உள்ளன.

ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ காரில், 313 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே லக்கேஜ்களை கொண்டு செல்வதற்கும் ஏதுவாக இருக்கும். மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), சிட்ரோன் சி3 (Citroen C3) ஆகிய கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி செலிரியோ மாற்று ஆப்ஷனாக உள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காருடனும், இது போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 22:36 [IST]
English summary
Maruti suzuki celerio sales report august 2024 21 per cent degrowth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+