மைலேஜில் பைக்குகளையே மண்டியிட வைக்கும் காரோட விலை இவ்ளோதானா! டூவீலருக்கு பதிலா பேசமா இதை வாங்கிக்கலாம்...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 2,985 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 3,399 ஆக இருந்தது. இது 12 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை 5.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.05 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 67 பிஎஸ் மற்றும் 89 என்எம் ஆகும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மறுபக்கம் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கும். அதாவது சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் வெறும் 57 பிஎஸ் மற்றும் 82 என்எம் மட்டுமே.

பவர் அவுட்புட் குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. அதாவது இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்கள் அனைத்தும் இதைக்காட்டிலும் மிகவும் குறைவான மைலேஜ் மட்டுமே வழங்குகின்றன.
சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஓரளவிற்கு விலை குறைவான கார் மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், ஓரளவிற்கு அதிக வசதிகளை கொண்ட கார் என்ற சிறப்பும் மாருதி சுஸுகி செலிரியோவிற்கு உள்ளது.
இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை மாருதி சுஸுகி செலிரியோ ஹேட்ச்பேக் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி செலிரியோ போட்டியிட்டு வருகிறது. ஜூன் மாதம் விற்பனையில் சரிவடைந்திருந்தாலும் கூட, வரும் மாதங்களில் இந்த காரின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








