35 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரை இவ்ளோ கம்மியான விலையில் விக்கறாங்களா! பைக் வியாபாரம் படுக்க போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 3,314 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3,216 ஆக மட்டுமே இருந்தது. இது 3 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை 4.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.04 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Maruti Celerio

இது ஓரளவிற்கு விலை குறைவான கார் என்பதுடன், சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. இந்த காரின் ZXI+ MT வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 24.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் LXI MT, VXI MT மற்றும் ZXI MT ஆகிய 3 வேரியண்ட்களும் ஒரு லிட்டருக்கு 25.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

மறுபக்கம் செலிரியோ காரின் ZXI AGS மற்றும் ZXI+ AGS ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 26.00 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இதுதவிர இந்த காரின் VXI AGS வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Celerio Front View

இவை அனைத்துமே பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும். ஆனால் இவை அனைத்தையும் விட சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள VXI MT வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக உள்ளது.

மாருதி சுஸுகி செலிரியோ காரானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி செலிரியோ போட்டியிட்டு கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அடுத்ததாக டிசையர் செடான் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீவிரமாக தயாராகி கொண்டுள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனம் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 24, 2024, 23:45 [IST]
English summary
Maruti suzuki celerio sales report may 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+