வெறும் அஞ்சரை லட்ச ரூபாய்க்கு 35 கிமீ மைலேஜ் தரும் காரை குடுக்கறாங்களா! விடிஞ்சதும் மொத வேலை ஷோரூம் போறதுதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி செலிரியோ கார், ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதுடன், நல்ல மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பலரின் 'சாய்ஸ்' ஆக மாருதி சுஸுகி செலிரியோ திகழ்கிறது. இதன் மூலமாக நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையில், மாருதி சுஸுகி செலிரியோ கார், விற்பனையில் ஓரளவிற்கு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியிருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி செலிரியோ காரின் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாகவே இந்த விஷயம் நமக்கு தெரிய வந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,379 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki Celerio

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,215 ஆக மட்டுமே இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி செலிரியோ 9வது இடத்தை பிடித்துள்ளது.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கார் ஆகும். வெறும் 5.37 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே மாருதி சுஸுகி செலிரியோ காரை உங்களால் வாங்க முடியும். இது எல்எக்ஸ்ஐ (LXi) வேரியண்ட்டின் விலை ஆகும்.

Maruti Suzuki WagonR

அதே நேரத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் டாப் வேரியண்ட்டான இஸட்எக்ஸ்ஐ+ ஏஜிஎஸ் (ZXI+ AGS) வேரியண்ட்டின் விலை 7.04 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

விலை குறைவானது என்பதுடன், இந்தியாவிலேயே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்று என்பது, மாருதி சுஸுகி செலிரியோ காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.

இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) உள்ளிட்ட கார்களுக்கு பதில் வேறு ஒரு காரை தேடி கொண்டிருப்பவர்கள், மாருதி சுஸுகி செலிரியோவை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ முழுக்க முழுக்க மிடில்-க்ளாஸ் மக்களுக்கான கார். குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நல்ல சாய்ஸ். குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு, இது ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 15, 2024, 22:26 [IST]
English summary
Maruti suzuki celerio sales report november 2024 7 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+