35 கிமீ மைலேஜ் காரை சும்மா குடுத்தா கூட வாங்க மாட்டாங்க போல! யார் தலையில கட்டலாம்னு பாத்துட்டு இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars), நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றுதான் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் 'டல்' அடித்து கொண்டேதான் இருக்கிறது. அதாவது ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டும்தான் விற்பனையாகி வருகின்றன.

இது நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ காரின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3,044 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki Celerio

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், 4,317 ஆக இருந்தது. இது 29 சதவீத வீழ்ச்சி ஆகும். பொதுவாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும். அதுவும் பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆனால் பண்டிகை காலமாக இருந்த நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், மாருதி சுஸுகி செலிரியோ கார், விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக செலிரியோ இருக்கிறது.

Maruti Celerio

இத்தனைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ விலை உயர்ந்த காரும் கிடையாது. இந்த காரின் ஆரம்ப விலையே வெறும் 5.36 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.04 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

விலை குறைவானது என்பதுடன், இது இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார் விற்பனையில் தடுமாறி கொண்டிருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கவலையளிக்க கூடிய ஒரு விஷயமாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ கார், வாடிக்கையாளர்களை ஏன் ஈர்க்க தவறுகிறது? என்பதற்கு சமூக வலை தளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காரில் தரமற்ற மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை பலரும் முதல் காரணமாக சுட்டி காட்டுகின்றனர்.

அடுத்து பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகவும் பலர் கருதுகின்றனர். அத்துடன் சஸ்பென்ஸன் மற்றும் ஸ்டியரிங்கில் பிரச்னைகள் இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் பலரும் பதிவிடுவதை காண முடிகிறது. மேலும் போட்டி மாடல்கள் வலிமையாக இருப்பதும், மாருதி சுஸுகி செலிரியோ காரின் இறங்குமுகத்திற்கு ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 23:30 [IST]
English summary
Maruti suzuki celerio sales report october 2024 29 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+