35 கிமீ மைலேஜை வாரி வழங்கற காரோட விலை உண்மையா இவ்ளோதானா! இது தெரிஞ்சா இனி ஒருத்தரும் பைக் வாங்க மாட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தோற்றத்தில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக ஓட்ட முடியும். அத்துடன் ஹேட்ச்பேக் கார்களை ஓரளவிற்கு குறைவான விலையிலேயே வாங்கி விட முடியும். இன்று எஸ்யூவி கார்களில் (SUV Cars) கலக்கி கொண்டுள்ள பலரும், அனேகமாக ஹேட்ச்பேக் கார்களில்தான் டிரைவிங் பழகியிருப்பார்கள். இந்திய சந்தையை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு ஹேட்ச்பேக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.
இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரும் ஒன்றாகும். இந்த ஹேட்ச்பேக் காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3,241 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3,246 ஆக இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனையில் பெரிய அளவில் வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ இல்லை என்பது நமக்கு தெரிய வருகிறது. விற்பனை எண்ணிக்கை ஒரே அளவில் சீராக தொடர்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடிய கார்களிலேயே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி செலிரியோவை குறிப்பிட முடியும். இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடிய ஒரு சில பைக்குகளின் மைலேஜை விட அதிகம். இவ்வளவு அதிக மைலேஜ் வழங்க கூடியதாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை மிகவும் குறைவுதான். இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXI) விலை 5.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை (ZXI Plus AGS) 7.04 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா டியாகோ (Tata Tiago), சிட்ரோன் சி3 (Citroen C3) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) போன்ற கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவு மற்றும் மைலேஜ் அதிகம் ஆகிய அம்சங்களுடன், ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது என்பதும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும். எனவே புதிதாக கார் ஓட்டி பழகியவர்கள் மற்றும் முதல் முறையாக கார் வாங்க உள்ளவர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
மாருதி சுஸுகி செலிரியோ கார், 5 சீட்டர் மாடல் ஆகும். இந்த காரின் கேபின், விசாலமானதாகவும், சௌகரியமானதாகவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் லக்கேஜ்களை கொண்டு செல்ல வசதியாக 313 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Boot Space) இடவசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற நடைமுறை பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளும், மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு பலம் சேர்க்கின்றன.


Click it and Unblock the Notifications








